உதிர்க்கும் நீர் திவலைகள்
உதிர்க்கும் நீர் திவலைகள்
மழை பெய்து
ஓய்ந்து விட்டது
பறவைகளும் விலங்குகளும்
உடம்பை சிலிர்த்து
உதிர்த்து விட்டன
தன் மேல்
தேங்கியிருந்த
நீர் துளிகளை
பச்சை தாவரங்கள்
மட்டும் தன்
மேல் இருந்த
நீர் திவலைகளை
உதிர்க்க
காத்திருக்கிறது
காற்றின் உரசலுக்கு