பணம்

நான் இல்லாமல் நீ இல்லையடா ! - அதிகம்
நான் இருந்தாலும் உனக்கு தொல்லையடா!
நான் வருமுன் மனித மனம் வெள்ளையடா!
அந்த மனம் கொண்ட மனிதன் இப்போ இல்லையடா!

நான் வேண்டி நீ உழைப்பாயடா ! -கொலை
செய்தாலும் நான் இருந்தால் பிழைப்பாயடா !
என்னாலே நீ வாழ்வு தழைப்பாயடா! - இன்பமாய்
பொழுதையும் கழிப்பாயடா!

என்னாலே உன் உறவுகள் கூடுமடா!
நான் போனாலே அது திரும்பாமல் ஓடுமடா!
நான் நிறைந்திருந்தால் புகழாரம் பாடுமடா!
சற்றே குறைந்தாலும் மனமது பயத்தில் ஆடுமடா!

நிலவும் ஏற்ற தாழ்வுகளும் என்னாலே!
எவனும் எனை காண துடிக்கிறான் கண்ணாலே!
நான் இருந்தால் எல்லாம் வரும் தன்னாலே!
அந்த இறைவனும் எனக்கு பின்னாலே!

நான் இருந்தாலே உனக்கு பெரிய உபச்சாரம்!
எனக்காக நடக்குது விபச்சாரம்! - இது
மனித சமுதாயத்தில் நடக்கும் அபச்சாரம்! - நான்
இருந்தாலே எவனும் பேசலாம் ஆச்சாரம்!

நான் இல்லையேல் நீ இழப்பாய் தன்மானம்!
இருந்தாலே உன் கை வரும் வெண் வானம்!
அதனாலே நீ தேடு வருமானம்! - ஆனாலும்
எனக்காக தொலைக்காதே உன் மானம்!

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (5-Feb-15, 9:01 pm)
Tanglish : panam
பார்வை : 166

மேலே