பதவி
நல்லதை செய்து எதையும் எதிர்பார்க்காதிருக்க
நானென்ன தீர்க்கதரிசியா ?
என் வீட்டி திண்னை வெறிச்சோடிவிட
பக்கத்து பெரும்புள்ளி தவுடுகளை அடுக்க
சொம்மா இருந்த என்னை உசுப்பிவிட்டு
வீட்டுக்குள் விலைபோகா வியாக்கியானம் நடத்துகிறான் !
இன்று
நடப்பது நல்லதாக இருக்க
பங்கம் ஏதும் ஏற்படா வண்ணம்
தெருவுக்கு தெரு உறைமோர் ஊற்றுகிறான்
புதுக்கதை தன்னிச்சையாய் புளிக்காமலிருக்க.....
வரும் கிராமத்து பஞ்சாயத்து பிரகடனம்
பக்க விளைவு ஏதுமில்லாமல் பரிசளிக்க
முன் இருந்தோர் முடிவெடுக்க
நாட்டாமை பதவி மீண்டும் அரவணைக்க
முற்றம் மறுபடியும் மூச்சுத்திணரி
தோள் மேல் சாத்தியது
கதர் துண்டை கடமை செய்வாய் என்றுரைத்து !...