பொன்னிற மாலைப் பரிசோ
வண்ணமோ நீலம் விழிகள் அசைவினில்
எண்ணமோ வானவில் என்னிதய வானத்தில்
புன்னகை செவ்விதழில் பூத்தவெண் முல்லையோ
பொன்னிறமா லைப்பரி சோ
வண்ணமோ நீலம் விழிகள் அசைவினில்
எண்ணமோ வானவில் என்நெஞ்சில் --கண்மொழியே
புன்னகை செவ்விதழில் பூத்துவந்த வெண்முத்தோ
பொன்னிறமா லைப்பரி சோ

