விஜய்
கட்சி மூன்றெழுத்து
கட்சி கொண்டு போரிடும்
களம் மூன்றெழுத்து
அந்தக் களத்திற்கு வரத் தயங்கிய சில நடிகர்களின் பெயர் மூன்றெழுத்து
தயங்காமல் இவர் ஆரம்பித்த கட்சியின்
பெயரான வெற்றி மூன்றெழுத்து
அந்த வெற்றியை வரும் தேர்தலில் அறுவடை செய்யப் போகும் விஜய் மூன்றெழுத்து
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இவ் வரிகளை பாரதி எழுதியது உனக்காகத்தான்
உனக்கு மிகவும் பிடித்த கன் சுட்டு வீழ்த்தும்
கன் அல்ல
உன்னை தொட்டு வாழ்த்தும் ரசிகன்
அவன்தான் உனக்கு
இரு கண்
அவன் தான் துயரில் உனக்கு ஆதரவாய் இருக்கான்
சிலர் நீ தான்
தமிழகத்தை 2026 இல் இருந்து காக்கப் போகும் இயேசு என்று தெரியாமல்
உன்னை ஏசுகிறார்கள்
எதற்கும் கலங்க வேண்டாம்
நீ சாமியின் ஆதரவு பெற்றவன்
எங்கள் புதுவையின் மக்கள் முதல்வர்
ந. ரங்கசாமியின் ஆதரவு பெற்றவன்
நீ ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
மக்கள்
வேதனைத் தீயில்
வேகுவாரா
சோதனை நோயில் சாகுவாரா
ரோதனைப் பேயால் நோகுவாரா
நீ அயல் நாட்டில் பிறக்காது
நம் தமிழ் நாட்டில் பிறந்த சேகுவேரா
நீ ஊராண்டும்
இப்பாராண்டும் நூறாண்டும் வாழ அன்போடு வாழ்த்துகிறோம்
இந்திய பெருங்கடலாய் மக்கள் ஆதரவு நீண்ட இருக்கட்டும்
இவ்வுலகை ஆண்டு இருக்கட்டும்
அதற்குத் துணையாய்
2026
ஆண்டிருக்கட்டும்

