அழகின் அழகே

சிகை சீரெடுக்க வேண்டாம்,
பூவைக்கு பூச்சூடவும் வேண்டாம்,
திரை வான்னிற்கு பொட்டிட வேண்டாம்,
கரை நிலவுகளுக்கு மையிடவும் வேண்டாம்,
உயிர் காற்று வெளியிடையில் கடிக்கலன் வேண்டாம்,
ஊஞ்சலாடும் காதணிகளும் வேண்டாம்,
ஈரிதல் தாமரைக்கு இரத்த சாயம் வேண்டாம்,
ஓர் அறை சங்கீற்கு வைர மாலையும் வேண்டாம்,
வெண்பஞ்சு மேகத்திற்கு பட்டாடைகள் வேண்டாம்,
வெண்சிட்டு கரும்புகளுக்கு வண்ண வலையல்களும் வேண்டாம்,
தங்க முலாமிட்ட மூங்கில்களுக்கு கொலுசுகள் வேண்டாம்,
எந்தப் பொன்னகையும் வேண்டாம்!!,
உந்தன் புன்னகை ஒன்றே அழகின் அழகே!!!....