வேண்டும் தலைவா
நேற்றைய தலைவர்கள்
வாழ்ந்தவர்கள்.
வாழ்ந்தவர்கள் சாயலில்
நிகழ்கால தலைவர்கள்
ஏராளம் நம் தேசத்தில்.
சாயல் தலைவர்களே
சாயம் வெளுக்கும் நாள்
தூரம் இல்லை
நிகழ்கால வாழ்க்கையில்
நீ காட்டும் அறம் எது?
நீ காட்டும் வாழ்வியல் எது?
மனிதம் உயர்வு பெற
வழி எது?
எனக் கேட்கும்
நிகழ் கால தலைமுறைகள்
நிஜ தலைவர்களைத் தேடி....,

