மங்கல சகுனம்

#மங்கல சகுனம்

கோவிலுக்குள் நுழையும் போதெல்லாம் ஒலிக்கிறது
நல்ல சகுனமாய்
மணியோசை. !

கருவறைக் கடவுளை
வணங்கும்போதெல்லாம் விழுகிறது
நல்ல சகுனமாய்
மலர்கள்..!

வாசல் விட்டு வெளியில்
வரும் போதெல்லாம் காண்கிறேன்
நல்ல சகுனமாய்
பசுக்கள். !

நற்காரியங்கள் துவங்கும் போதெல்லாம்
கொட்டி விடுகிறது
நல்ல சகுனமாய்
மஞ்சள்..!

இப்படியான
நல்ல சகுனங்கள்
நிறையவே இருக்க
நல்லதே நடக்கும் பாக்கியம்
எல்லோருக்கும்
வாய்த்து விடுவதில்லை

மங்கல சகுனத்தில்
மஞ்சள் நதிக்குள்
நீந்திக் களிக்கின்றேன்
கடவுளின் ஆசீர்வாதங்களுடன். !

#சொ .சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (29-Dec-25, 10:37 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 21

மேலே