பாக்யராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாக்யராஜ் |
இடம் | : மேலக்கலங்கல் |
பிறந்த தேதி | : 01-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2021 |
பார்த்தவர்கள் | : 2141 |
புள்ளி | : 848 |
தமிழ் பிறந்த தென்காசி பொதிகை மாவட்டத்தில் மேலக்கலங்கல் என்ற கிராமத்தில் ஞான.அந்தோனி- மேரி தம்பதிகளுக்கு தலை மகனாகப் பிறந்தேன்
ஆர்.சி.துவக்கப் பள்ளி மேலக்கலங்கலில் ஆரம்பக் கல்வியும்,சிஇடி டென்னிசன் உயர்நிலைப் பள்ளி கீழக்கலங்கலில் உயர்நிலைக் கல்வியையும்,ஜசிஜ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தென்காசியில் மேல்நிலைக் கல்வியையும்,ஹெட்வெல் மருத்துவமனை ஜங்ஷன் திருநெல்வேலியில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப பட்டயப் படிப்பை படித்து
தனியார் மருத்துவமனையில் 25 ஆண்டுகளை கடந்து ரத்தப் பரிசோதனையாளராக பணியாற்றுகிறேன்..
நான் ஒன்பது வயது முதல் கவிதைகள் எழுதி வருகிறேன்
வரமாகிட தவமோ
_____________________
வரம் வேண்டி
விரதம் கடைப்பிடித்து
தவமிருக்க /
கழுத்தில் துளசி
மாலையுடன் துணை
மாலையிட்டு /
நாற்பது நாள்
உணவின்றி விரதம்
கொண்டு /
நம்பிக்கையுடன் வேண்டினால்
கற்சிலைக்கும் காதுகள்
கேட்டிடும் /
கண்களும் பார்த்திடும்
வேண்டியது கிடைத்திடும்
அருளால் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
பணிந்திடு இல்லையேல் துணிந்திடு
தமிழ் கற்றிட பணிந்திடு /
தாய்மொழி பேச துணிந்திடு /
உணவூட்டும் விவசாயிகளுக்கு பணிந்திடு /
உழவுத்தொழில் செய்திட துணிந்திடு/
பெற்றோர் தியாகத்துக்கு பணிந்திடு/
பெற்றவர்களை கைவிடாதிருக்க துணிந்திடு/
மனிதனுக்கு உதவிட பணிந்திடு/
மனிதநேயம் வளர்க்க துணிந்திடு/
பெண்களை மதித்து பணிந்திடு/
பெண்மை காத்திட துணிந்திடு/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
தாமி
தாமியின் மோகம் மனிதநேயம் அழிவின் விளிம்பைத்/
தடுத்திடுவோம் ஐந்தில் மனிதம் இருக்கட்டும் அறுபதுவரை/
உலகத்தை ஆட்கொள்ளும் ஆட்கொல்லி நோயைவிடக் கொடியது /
உயிர்காக்கும் வேளையில் உதவி செய்வதைத் தடுக்கும்/
சாகச தாமி சிலவேளை உயிரையும் பறிக்கும்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம்: 27
" இந்த வாயில்லா ஜீவன்கள் கூட அந்தம் பக்கம் போகாதேனு சொன்ன,என் பேச்சைக் கேட்டு அடுத்த தோட்டத்து பக்கமோ , அடுத்த வீட்டு பக்கமோ போகாதுக.".(ஆடு,மாடு,கோழி,நாய் இவைகளை காண்பித்தவாரு சிங்காரம் சொல்லி) பலமாக அழுதார் சிங்காரம்.." மனிதனுக்கு ஆறறிவுனு சொல்றாங்க..அது தப்பு..தப்பு.. வாயில்லா ஜீவன்களுக்கு தான் ஆறறிவு " .. என்று சொல்லி மீண்டும் கதறி அழ ஆரம்பித்தார்.."
" காதல் என்ற உணர்வில் பெற்றோர் என்ற உறவினை " இப்படி அறுத்துட்டு போயிட்டானே என்று அழுது கதறினார் கெளதம் அப்பா சிங்காரம் வீட்டுக்கு வந்திருந்த ஊர் நாட்டாமை குருசாமியிடம்..
வழிந்தோடும் மழை நீரில் கயல்
உண்மைகள் பொய்க்காது
×××××××××××××××××××××××
உழவர்கள் உழைக்காது/
உணவுகள் கிடைக்காது/
விவசாயம் இல்லாது/
உயிரினம் வாழாது/
வனம் காக்காது/
வானம் பொழியாது/
வாய்மை உரைக்காது/
உண்மைகள் பொய்க்காது/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
கை கொடுக்கும் கை
&&&&&&&&&&&&&&&&
கையுடன் கை கோர்த்து மகிழ்வுடன்/
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை /
சாதி மதம் பேதம் இல்லாமல்/
சாதிக்க இணைந்த கைகளால் முடியும்/
ஏணிபோல் உயர்த்திட உதவிக்கரம் நீட்டினால்/
ஏழைகள் வறுமைக் கோட்டினை தாண்டலாம்/
பிள்ளைகள் பெற்றோரின் பின்னாளில் காத்திட /
பாசத்தில் கைகொடுக்கும் காலம் கனியட்டும் /
கடின முயற்சியின் வின்தொடும் முன்னேற்றத்திற்கு/
கடின உழைப்பே கை கொடுக்கும் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
கீழ்கதுவாய் மோனையில் கவிதை
××××××××××××××÷×××××××××××××××
இறுதிவரை உறுதியாகும் காதல்
×××××××××××××××××××××××××××××
கண்கள் கலந்திட வருகின்ற காதல்
சாணயளவு சற்றும் பிணைப்பில் சறுக்காது
பண்போடு பற்றிடும் அன்பை பகிர்ந்திட
ஆண்டுகள் ஆயிரம் இல்லறம் அற்புதமே
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
கல்விக்கூடக் காலங்கல்
×××××××××××××××××××××
கல்விக்கூடக் காலங்கல்
களையாத கோலங்கல்
கால்சட்டை சீறுடை
கலப்படமாகும் ஒற்றுமையே
நடந்தே சென்றோம்
நன்னடத்தை மாறாது
கடந்தே வந்தோம்
கல்வியில் சிறந்தவர்களாக
அடித்து கற்பிக்க
அனுமதித்தனர் பெற்றோர்
படித்தோம் பயமுடன்
பயணிக்கிறோம் நல்லவராக
விளையாட்டோடு கல்வி
வியதியின்றி வெற்றி
களைந்தோம் பிரிந்தோம்
கவலையில் ஆழ்ந்தோம்
" யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்