கல்விக்கூடக் காலங்கல்

கல்விக்கூடக் காலங்கல்
×××××××××××××××××××××
கல்விக்கூடக் காலங்கல்
களையாத கோலங்கல்
கால்சட்டை சீறுடை
கலப்படமாகும் ஒற்றுமையே

நடந்தே சென்றோம்
நன்னடத்தை மாறாது
கடந்தே வந்தோம்
கல்வியில் சிறந்தவர்களாக

அடித்து கற்பிக்க
அனுமதித்தனர் பெற்றோர்
படித்தோம் பயமுடன்
பயணிக்கிறோம் நல்லவராக

விளையாட்டோடு கல்வி
வியதியின்றி வெற்றி
களைந்தோம் பிரிந்தோம்
கவலையில் ஆழ்ந்தோம்

" யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Nov-23, 8:14 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 474

மேலே