அழுக்கினில் உயிர் நண்பன்

சகுதியில சாணியில புழுதியி
வெய்யிலில மழையினில பனியினில
காஞ்சு கருவாடாகி சுண்டிபோயி
அழுக்கு மூட்டயாயி கந்தலாயி
வியர்வை வாசம் பக்கத்தில
ஆசப்பட்டு அழுக்கானோம்

பூமி பச்சை பூசி அழகாக
ஊர் செழிக்க பஞ்சம் தீர்க்க
உயிர் சிரிக்க பசிதாகம் தீர
ஊர் அழகாக மக்கள் அழகாக
குலமே அழகாக ஜகம் செழிக்க
ஆசபட்டு அழுக்கு மூட்டயானோம்
விவசாயி உழைப்பாளி
உங்க உயிர் நண்பன்
நீ அழகாக நீ சிரிக்க

எழுதியவர் : Rskthentral (16-Nov-23, 11:54 am)
சேர்த்தது : rskthentral
பார்வை : 142

மேலே