rskthentral - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : rskthentral |
இடம் | : Kerala tvm |
பிறந்த தேதி | : 13-May-1976 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 528 |
புள்ளி | : 146 |
Lyricsts Moodithiranthidum album And also vaidheki musical documentary got international award from henry
மாசற்ற பொன்னினால்
பொன் மனம்
மாசாகின்
பொன்னே! பொன்னும் மாசே
கண்ணம்மா கண்களில்
கடவுச்சொல்லா காதல்
கரையுதம்மா உயிரில்
செல்லம்மா காதல்
தழுவிய இதழில்
நழுவிய தென்றலில்
சொல்லிய கடவுச்சொல்லில்
வீசிய முத்தத்தில்
பரவிய வாசத்தில்
கசிய காதலில்
விழிமீனாள்
தூண்டிலிட்டாள்
திறந்திட்டாள்
காதலின் தாள்
தேனென் பதோதென் திசைவளர்காற் றென்பதோ
மானென் பதோஇள மாலைப்போ தென்பதோ
வானில் உலவிடும் வண்ணநில வென்பதோ
நானென்சொல் வேன்என் நிலா
------இன்னிசை வெண்பா
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தேனென் பதோதென் திசைவளர்காற் றென்பதோ
மானென் பதோமென் மாலைப்போ தென்பதோ
வானில் உலவும் வண்ணநில வென்பதோ
நானென் சொல்வேன்என் நிலாத்தோழி நீயேசொல்
------கலிவிருத்தம் பல வாய்ப்பாட்டில்
தேனென் பதோதென் திசைவளர்காற் றென்பதோ
மானென் பதோமென் மாலைப்போ தென்பதோ
வானில் உலவும் வண்ணநில வென்பதோ
நானென் சொல்வேன் நிலாத்தோழி சொல்லிடு
------மா மா காய் விளம் அடிதோறும் அமைந்த கலிவிருத்தம்-
எதுகையாக நான்
மோனையாக அவள்
தொடருதே காதல்
உண்மைகள் பொய்க்காது
×××××××××××××××××××××××
உழவர்கள் உழைக்காது/
உணவுகள் கிடைக்காது/
விவசாயம் இல்லாது/
உயிரினம் வாழாது/
வனம் காக்காது/
வானம் பொழியாது/
வாய்மை உரைக்காது/
உண்மைகள் பொய்க்காது/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
ஓவியனும் உன்னையோர் ஓவியமாக் கல்கடினம்
தேவியுனை சிற்பி செதுக்க முடியாது
காவியக் கம்பனும் தோற்றிடுவான் பாவடித்தால்
பூவினம் தோற்றிடும் பூ
ஓவியனும் உன்னையோர் ஓவியமாக் கல்கடினம்
தேவியுனைச் சிற்பியும் செதுக்கத்தான் முடியுமாசொல்
காவியத்தின் கம்பனும் தோற்றிடுவான் பாவடித்தால்
பூவினமும் தோற்றிடும் பூங்கொடியே புன்னகையே
----கம்பனைச் சொல்லியதால் அவன் விருத்தத்திலும்
மாற்றி அமைத்திருக்கிறேன்
எதுகை மூன்றாம் சீர் மோனையுடன் காய் விளம் காய் காய்
எனும் வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்
மேலே வெண்பா வடிவம்
மாதம் ஒரு முறை
என் வானத்திலிருந்து
நீ விடுமுறை எடுத்து
விலகாதே .......
வெண்ணிலவே....
நீ இல்லாமல்
ஒரு நாள் விடுமுறை
ஆயினும்
நான் அமாவாசை
ஆகிறேன்
இருள் சூழ்ந்தது
என் வானின்
காதல் ஒளியே...
நீயே நிலவே....
பொன்மானே பூங்குயிலே வெண்ணிலவே வானவில்லே ....கண்ணோரம் கனவிலும்காதோரம்
என்னை அழித்து கொள்ளாமல்
காதலியை தொலைத்து கொள்ளாமல்
அவளை
சிறையிலிடாமல்
அவள் வலையில்
நான் விழாமல்
இருவரும் சுதந்திரமாக
அன்போடு
ஆனந்தமாக
வாழ்வதற்கு
காதல் வரமாக
உயிர்கள் வாழ்வதற்காக
தன் நிலை உயர
அனைவரின் நிலை உயர
ஜகம் செழிக்க
அகத்தில் ஜானம் பெற
சரஸ்வதி பூஜையும்
ஜானம் பெற்று
புறத்தில் வெளிப்படுத்த
நம்மை மேன்படுத்தும்
கருவியாம்
ஆயுத பூஜையின் சிறப்பு
பூஜையின் சிறப்பு