தேவியுனைச் சிற்பியும் செதுக்கத்தான் முடியுமாசொல்

ஓவியனும் உன்னையோர் ஓவியமாக் கல்கடினம்
தேவியுனை சிற்பி செதுக்க முடியாது
காவியக் கம்பனும் தோற்றிடுவான் பாவடித்தால்
பூவினம் தோற்றிடும் பூ
ஓவியனும் உன்னையோர் ஓவியமாக் கல்கடினம்
தேவியுனைச் சிற்பியும் செதுக்கத்தான் முடியுமாசொல்
காவியத்தின் கம்பனும் தோற்றிடுவான் பாவடித்தால்
பூவினமும் தோற்றிடும் பூங்கொடியே புன்னகையே
----கம்பனைச் சொல்லியதால் அவன் விருத்தத்திலும்
மாற்றி அமைத்திருக்கிறேன்
எதுகை மூன்றாம் சீர் மோனையுடன் காய் விளம் காய் காய்
எனும் வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்
மேலே வெண்பா வடிவம்