தேனென் பதோதென் திசைவளர்காற் றென்பதோ
![](https://eluthu.com/images/loading.gif)
தேனென் பதோதென் திசைவளர்காற் றென்பதோ
மானென் பதோஇள மாலைப்போ தென்பதோ
வானில் உலவிடும் வண்ணநில வென்பதோ
நானென்சொல் வேன்என் நிலா
------இன்னிசை வெண்பா
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தேனென் பதோதென் திசைவளர்காற் றென்பதோ
மானென் பதோமென் மாலைப்போ தென்பதோ
வானில் உலவும் வண்ணநில வென்பதோ
நானென் சொல்வேன்என் நிலாத்தோழி நீயேசொல்
------கலிவிருத்தம் பல வாய்ப்பாட்டில்
தேனென் பதோதென் திசைவளர்காற் றென்பதோ
மானென் பதோமென் மாலைப்போ தென்பதோ
வானில் உலவும் வண்ணநில வென்பதோ
நானென் சொல்வேன் நிலாத்தோழி சொல்லிடு
------மா மா காய் விளம் அடிதோறும் அமைந்த கலிவிருத்தம்-