கோமியா

வாங்கோ பிள்ளைவால் க்ஷேமமா


இருக்கிறேளா?

@@@@@

இருக்கிறேன் சாமி..

@@@@

வந்த விஷயத்தை சொல்லும்.

@@@@@@

என் மகனுக்குப் பெண் குழந்தை

பிறந்திருக்கு. நேற்று இரவு 10.15.

@@@@@@

குழந்தை பிறந்த நேரம் சரியில்லை.

அதுக்கு ஒரு தோஷம் இருக்கு. அதுக்குப்


பறிகாரம் கோ பூஜை செய்யணும்.


@@@@@@@

சாமி நாங்க பண்ணையார் குடும்பம். கோ

சாலை வச்சுப் பராமரிக்கறோம். 50 பசு

எங்க கோசாலையில் இருக்கு.

@@@@@@

அப்ப நல்லதாப் போச்சு. நாளைக்குக்

கார்த்தால ஆறு மணிக்கு வர்றேன். இந்தத்

தாள்ல எழுதியுள்ள சாமான்களை வாங்கி

வையுங்கோ.

கோ பூஜையை முடிச்சிட்டு பகவான்

சித்தப்படி ஜோதிடப்படி உங்க

பேரக்குழந்தைக்குப் பேரு வச்சிடலாம்.

@@@@@@@@

(அடுத்த நாள் கோ பூஜைக்குப் பின்)

@@@@

பிள்ளைவால் உங்க பெயர்த்திக்கு

நீங்க கோ மாதா பக்தர்களா இருக்கிறதால

'யா'வில் முடியற 'கோமியா'ங்கிற

பேருதான் பொருத்தமான பேரு. கோமியா

அந்த கோ மாதாவின் ஆசியோடு செல்வச்

செழிப்பான வாழ்க்கை வாழ்வா.

@@@@@#

ரொம்ப நன்றி சாமி.

@@@@@@

தனலட்சுமி சாமிக்கு தக்ஷ்ணைய

கொண்டு வா.

எழுதியவர் : மலர் (14-Jun-25, 10:43 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 14

மேலே