நெசவு
மலைவாழ் மக்கள் வாழும் சிற்றூரில்:
ஏண்டி அக்கி உன்ற பேரனுக்கு என்ன பேரு
வச்சிருக்கிறாங்க?
@@@@@@@
என்ற பேரன் பொறந்த பிறகு அரசாங்கம்
கொடுத்த தொலைக்காட்சி பொட்டில
காட்டறதை எல்லாம் என்ற மவன் மூணு
நாளு உடாம பாத்தான்.
@@@@
எதுக்குடி மூணு நாளுப் பாத்தான்?
@@@@@@
அவம் பையனுக்கு வைக்க ஒரு இந்திப்
பேரைத் தெரிஞ்சிக்கத்தான்.
@@@@@@@@@
அவனுக்குப் பிடிச்ச இந்திப் பேரு
கெடச்சுதா?
@@@@@@
ஆமாண்டி. கெடச்சுது. பேரு 'கேசவு'ன்னு
(கேஷவ்)
சொன்னான்.
@@@@@@@
கேசவு. நம்ம ஊரில இல்லாத பேரு.
அடுத்த கொழந்தையும் பையனாப்
பொறந்தா அந்தக் கொழந்தைக்கு
'நெசவு'ன்னு பேரு வச்சாலும் வச்சுருவான்
உன்ற மவன்.
@@@@@@
நெசவு நம்ம ஊரில் நடக்கிற தொழில்.
@@@@@@
கேசவு என்ன தொழில் எந்த ஊர்ல
நடக்கற தொழிலோ? நாம என்னத்தக்
கண்டோம்.
@@@@@@@
ஆமாம். ஆமாம். நாம என்னத்தக்
கண்டோம்.