கனி

கனி, கனி எங்கடி போயிட்ட, அரை மணி நேரமா உன்னைக்

கூப்படறேன். எங்கடி போயித் தொலைஞ்ச?


@@@@@@@@@@@@@

யாரம்மா கனி.


@@@@@@

என்னோட அஞ்சு வயசு பொண்ணுங்க. அரை மணி நேரமாக்


எங்க போனாளோ தெரியலிங்க.

@@@@@@@@@@@

என்னங்க இவ்வளவு பொறுப்பு இல்லாம இருக்கறீங்க. தினம்

ஏதாவது

ஒரு ஊரில ஒரு குழந்தை காணாமல் போகுது. கடத்திட்டு போயி

.... ஒண்ணும் சொல்லறதிக்கில்லீங்க. குழந்தைகளை

எச்சரிக்கையாப் பார்த்துக்கணுங்க. பெண் குழந்தைகளுக்குத்

தான் ஆபத்து அதிகமுங்க.

@@@@@@@@@@

இந்த கிராமத்தில முப்பது வீடு இருக்குதுங்க. வீட்டுக்கு ஒரு நாய்.


வெளி அளுங்க வந்தா அவுங்களை விடமா துரத்தி ஊருக்கு

வெளியே விட்டுட்டுத் தான் எங்க ஊரு நாய்கள் வேற வேலை

பார்க்கும். ஒரு நாய் குரைச்சா மற்ற எல்லா நாய்களும் குரைக்க

ஆரம்பிச்சிடும். தெரிஞ்சவங்க இருந்தாத் தான் வெளி ஆளுங்க

ஊருக்குள்ள வரமுடியும்.

@@@@@@@@@@

இந்தக் காலத்தில தெரிஞ்சவங்களால தான் குழந்தைகளுக்கு


ஆபத்து அதிகம்.

@@@@@@@@

உள்ளூருக்காரன் எவனாவது தரங்கெட்டதனமா நடந்துட்டா

அவங் கையைமுறுக்கித் தொங்கவிட்டுத்தான் அவனைக் காவல்

நிலையத்துக்கு இழுத்துட்டு போவாங்க.

@@@@@@@@

அது சரிங்க. உங்க ஊரு முப்பது வீடுள்ள சின்ன கிராமம்னு

சொன்னீங்க. நம்ம தமிழர்கள் யாரும் அவுங்க

குழந்தைகளுக்குத் தமிழ்ப் பேரு வைக்கிற பழக்கம் இல்லை.

சோழ மன்னர் ராஜராஜன் காலத்திலிருந்தே தமிழ்ப் பேரைப்

பிள்ளைகளுக்கு வைக்கிற வழக்கம் கொறஞ்சுட்டு வர

ஆரம்பிச்சுதாம். இந்தக் காலத்திலெ போயி நீங்க உங்க

பொண்ணுக்கு 'கனி'ன்னு தமிழ்ப் பேரை வச்சிருக்கறீங்க.

@@@@@@@@@@

உலகத் தமிழர்களில் 95% பேர் அவுங்க பிள்ளைகளுக்குத்


தமிழ்ப் பேருங்கள வைக்கறதில்லீங்க. தமிழ்ப் பேரை வச்சிட்டு

பள்ளில குழந்தைகளைச் சேர்க்கப் போனா "என்னங்க உங்க

பையனுக்குத்/பொண்ணுக்குத் தமிழ்ப் பேரை வச்சிருக்கிறீங்க?


எங்க பள்ளில ஆயிரத்து ஐநூறு பேர் பட்டிக்கிறாங்க. ஒரு

குழந்தை பேரு கூடத் தமிழ்ப் பேரு இல்லை. இந்திப் பேரு,

அல்லது

வெளிநாட்டுப் பேரு உள்ள குழந்தைங்க தான் படிக்கறாங்க.

உங்க குழந்தை

பேரைக் கூப்படறபோது மற்ற குழந்தைகள் உங்க குழந்தையை

ஒரு மாதிரியாப் பார்ப்பாங்க. உங்க

குழந்தைக்கு மனது ரொம்ப சங்கடப்படும். நீங்க உங்க

குழந்தையை வேற பள்ளில சேக்கறதுதான் நல்லது"னு

சொல்லறாங்க. பேசறது தமிழ். ஆனா பிள்ளைங்க பேருங்க

இந்திப் பேருங்க. இல்லன்னா வெளிநாட்டு மொழிப் பேருங்க.


@@@@@@@@@@@@@@@@@@@

என்ன செய்யறதுங்க. காலம் கெட்டுக் கெடக்குதுங்க. எங்க

பொண்ணுப் பேரு 'கனி'. ஆனா இது தமிழ்க் கனி இல்லங்க.

எங்க சொந்தக்காரப் பையன் ஹவாய்ல வேலை பார்க்கிறேன்.

அங்க 'கனி'ங்கிற பேரு பிரபலமா இருக்கிற பேராம். அந்தப்

பேரை எங்க பொண்ணுக்கு வச்சிருக்கிறோம்.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Kani = Name 'Kani' generally means 'Girl' or 'Sound' is a Feminine (or Girl) name. Name 'Kani' is Hawaiian origin

எழுதியவர் : மலர் (12-Jun-25, 8:00 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : kani
பார்வை : 11

சிறந்த கவிதைகள்

மேலே