அஃகா

டேய நம்ம ஊர்ல ஆயிரம் வீடுகள் இருக்கு. மக்கள் தொகை

நாலாயிரம். இந்த நாலாயிரம் பேரில் ஒருத்தர் பேருகூடத் தமிழ்ப்

பேரு இல்லை. நம்ம கொள்ளுத் தாத்தா காலத்தில் இருந்தே இந்திப்

பேருங்க தான். தமிழ்ப் பேருங்களைப் பிள்ளைகளுக்கு

வைக்கிறதில்லை.

தமிழ்ப் பெயர் வைப்பதை மரியாதைக் குறைவாக

நினைக்கிறார்கள்.

@@@@@@@@

ஆமாண்டா நட்ராஜ் நீ சொல்லறது உண்மை தான். இதை மாற்ற

முடியும்னு நீ நினைக்கிறாயா? அரசும் ஆசிரியப் பெருமக்களும்

நினைத்தால் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். ஒழிக்க

முடியாத்தது சாதி அமைப்பு மட்டும் தான். மனித குலம் வாழும் வரை

சாதிகளும் இருக்கும். சாதிகள் இந்தியர்கள் வாழும் நாடுகளிலும்

புற்று நோய் போல் பரவி வருகிறது.

@@@@@@@@@

சரி. அது கெடக்கட்டும் விடு. உன் பெண் குழந்தைக்குத் தமிழ்ப் பேரா

இந்திப் பேரா?

@@@@@@@@@

இப்ப இந்திய மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்திப் பெயர் போல்

உள்ள அர்த்தமில்லாத பேருங்களை உருவாக்கி அந்தப்

பேருங்களைக் குழந்தைகளுக்கு வைப்பது தான். நம்ம ஊர் பேரே

ஸ்ரீமுஷ்ணம். அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியல. நான் மட்டும்

தமிழ்ப் பேரை என் குழந்தைக்கு வச்சா நம்ம ஊர் மக்கள் என்னை

மதிப்பாங்களா? அதனால் நானே ஒரு பேரை என் பெண்

குழந்தைக்கு உருவாக்கி வச்சிருக்கிறேன்.

@@@@@@@@@@

என்ன பேருன்னு சொல்லுடா

@@@@@@@@@@

என் பெண் குழந்தையின் பெயர் 'அஃகா'. கிருத்தியா, பூவிஷா. இது

போன்ற பெயர்கள் நம் மக்களால் உருவாக்கப்பட்ட பெயர்கள்.

எழுதியவர் : மலர் (24-Jul-25, 8:44 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 10

மேலே