அசையும் தென்றலே


அந்தி நெருங்கும் வேளை
அசையும் தென்றலாய் வந்தாள்
மௌவலாய் மணத்தாள்
சரிந்தது உடை ஒடிந்தது இடை
சொரிந்தது அழகு மடை
வானோக்கியுயர்ந்த மலைமுகட்டிலிருந்து
இறங்கியடித்தது மலைக்காற்று
தலைகுப்புற வீழ்ந்தேன் நான்

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (29-Jul-25, 12:21 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : asaiyum thentralae
பார்வை : 23

மேலே