மழைக்கால நிலா
மழைக்கால நிலா
கொஞ்சம் மங்கலாய்த்தான் தெரிகிறாய்..!
அவ்வப்போது அரை முகம் காட்டுகிறாய்
சில நேரங்களில் காணாமலேயே
போய் விடுகிறாய்..!
தேடிக்கொண்டே இருக்கிறேன்
மேகத் திரை விலக்கி
மெல்ல எட்டிப் பார்க்கிறாய்…
ஒளிப் படலத்தைக்
கொஞ்ச கொஞ்சமாய்க்
கூட்டிக் குறைக்கிறாய்..!
கார் மேகங்களுடன்
கூட்டணியமைத்து
கண்ணாமூச்சி
விளையாடுகிறாய்..!
மழைக்கால நிலவே
அரைகுறை
அமாவாசை நீ..
யார் விரதமிருப்பார்கள்
பொய்யான
அமாவாசைகளில்..?
முழுமை யானாலும்
அரைகுறையானாலும்
நீ அழகுதான்…
எப்படி இருந்தாலும்
நீ என் கவிதைக்குள்
நுழைத்து விடுகிறாய்..!
ம்ம்.
ஆணவம் கொண்டு விடாதே..
அள்ளிக் கொண்டுபோக
அதோ வந்துகொண்டிருக்கிறது
மழை..!
#சொ.சாந்தி

