வாடி ரசிப்போம் நாமும் வா

ஓடிவரும் நீரோடை ஓசையி லேதாளம்
பாடிவரும் தென்றலோ பாடிடும் பூபாளம்
கூடிவந்து பூங்குயில் கூட்டம் இசைபாடும்
வாடிக் கிடக்கும்இவ் வண்ணப்பூக் கள்சிரிக்கும்
வாடிரசிப் போம்நாமும் வா

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-25, 9:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 24

மேலே