கங்கைமணி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கங்கைமணி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 1679 |
புள்ளி | : 413 |
அன்புடன் வணங்குகிறேன்.
என் தாயவளை வணங்குகிறேன்.இந்தியத்தாய் அவளை வணங்குகிறேன்.கடவுளை வணங்குகிறேன்.எனது கவித்திறனை வணங்குகிறேன்.இப்பக்கங்களை புரட்டும் உமது விரல்களை வணங்குகிறேன்.
நான் எனது தாய் நாட்டின் சுவாசத்தில் வளர்ந்தவன்,வளர்ப்பவன்,வளர்ந்துகொண்டிருப்பவன். எனது நினைவுகளை.கருத்துக்களை.உணர்வுகளை கவிதையாக்குகிறேன்.என்னைப்பொறுத்தவரை பொய்களின் வர்ணனைகளை(உவமைகளை) அணிகலன்களாகக்கொள்வதே கவிதை என்கிறேன்.ஆனால் அதன் கருத்துக்கள் ஒருபோதும் பொய்யாக்கா?!. எனது கவிதைகளில் இயற்கையை இணைப்பதை இயல்பாகக் கொண்டவன். நான் கவிதை எழுதுவது நான் ரசிக்க.எனது ரசனையை பிறர் ரசித்து பாராட்ட மேலும் எனது மன அமைதிக்காக.எனது மனக்கொந்தளிப்புக்களை கவிதை வடிவில் கிறுக்கி தீர்த்துக்கொள்பவன் இந்த கிறுக்கன்.
எனது கருத்துக்கள் அனைத்தும் உண்மை,தவறொன்றும் இல்லை என்று வாதாட நான் ஒன்றும் முற்றும் தெரிந்து துறந்த முனிவனல்ல.இக்கால சூழலில் சுழலவந்த ஒரு சிறுவனே.நான் ஏமார்ந்தது.என்னை மட்டுப்படுத்துவது எனது சோம்பல் தனமே!. அதனாலேயே எனது படைப்புக்களில் எவ்வளவோ மறந்து போயின.,மறைந்தும் போயின.எனது நினைவில் நின்றவர்களை மாத்திரம் இதில் எழுதுகிறேன்.எனது புதிய படைப்புக்களையும் படைக்கிறேன்!... இனி புரட்டட்டும் உமது விரல்கள் எனது பக்கங்களை.
அன்புடன்
-கங்கைமணி
*************
விடுமுறை வழங்கப்பட்ட
பள்ளிக்கூடத்தில்
ஓடித்திரியும் எலிகளைப்போல
சுதந்திரமாயத் திரியும் சாரை
*
படகு சேவைக்குப்
பகிரங்க விடுமுறை
அறிவிப்பு விடும்
*
கொக்குகள்
கருவாடு உண்ணும்
நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கான
உறுதிப் பத்திரம் வழங்கும்
*
நீர் நின்றத் தடங்கள்
பாறைகளும் பாவாடைக் கட்டியிருந்தன என்பதற்கான
அடையாளம் காட்டும்
*
தூரத்து ஊரொன்றில்
கவிழ்ந்த படகில் மூழ்கி மரித்த
எவரோ ஒருவரின்
இடுப்பு வேட்டித்துண்டைப்
பதுக்கி வைத்திருந்தப்
பாறை மனசு வெளிச்சத்திற்கு
வந்து விடும்
*
விதைநெல்லை விற்று
அரிசிவாங்கும் விவசாயியின்
கண்களில் நதிபாய
மரம்
ஒப்பனை செய்ய
வானிடமும் மண்ணிடமும்
கேட்டது
மரத்தடியில் ஒரு கண்ணாடி சகதி
-மனக்கவிஞன்
#அப்பா என்றழைக்கிறது கவிதை..!
கவிதைக்குக் கரு கேட்டேன்
எடுத்துக்கொள் என்றாள்..!
எடுத்தேன்… கொடுத்தாள்
கொடுத்தேன்… எடுத்தாள்..!
கைகால் முளைத்தது
அவளை முட்டி உதைத்தது...
என்னை அப்பா என்றழைக்கிறது
இப்போது கவிதை..!..
#சொ. சாந்தி
#அப்பா என்றழைக்கிறது கவிதை..!
கவிதைக்குக் கரு கேட்டேன்
எடுத்துக்கொள் என்றாள்..!
எடுத்தேன்… கொடுத்தாள்
கொடுத்தேன்… எடுத்தாள்..!
கைகால் முளைத்தது
அவளை முட்டி உதைத்தது...
என்னை அப்பா என்றழைக்கிறது
இப்போது கவிதை..!..
#சொ. சாந்தி
மனக்கத வைத்திறந்து மௌனமாய்நீ வந்தாய்
எனக்குள்ளே வானவில் ஏழு நிறத்தில்
இனந்தெ ரியாஉணர்வு எண்ணத்தில் உந்தன்
நினைவுகளின் சாரல் மழை
அளவில்லா அன்பிற்கு
ஏங்குகிறது உலகம்
தாய் மடி தேடும் குழந்தை
தனைமறந்தனைக்கும் அன்னை
ஈடில்லா இன்பம் இங்கே
இதை தந்த தெய்வம் எங்கே !
மகளென்றும் தெரியாது
மகனென்றும் தெரியாது
தாயென்ற உணர்வுக்கு
அணைக்கத்தான் தெரிகிறது .
படைத்தவனின் விந்தையைப்பார்
பகுத்துவைத்தான் உயிர்களை
பொதுவில் வைத்தான் தாய்மையை
இங்கே ...!
தாயும் சேயும்
ஒன்றாகிப்போனபிறகு
பெற்றோர் யாராகஇருந்தாலென்ன !
தாயன்பின் மகத்துவமிது
உயிர்களின் தனித்துவமிது
பலநேரங்களில் ....,
ஐந்தறிவிடம் ஆறறிவு
அடிபட்டுப்போகிறது .
நோய் தீர்க்கும் மருந்தொன்று
உண்டென்றால் இவ்வுலகில் அது
தாயன்பு மட்டும்தான்
நாம் எத்தனைமுறை
வேண்டுமானாலும
உன் எண்ணத்தை
எடுத்தெறிய நினைக்கிறேன் .., முடியவில்லை !
உன் எண்ணம் திடப்பொருளாக இருந்தால் ...,
கரம் கொண்டு பிய்த்து எறிந்துவிடுவேன் .
உன் எண்ணம் எழுத்தாக இருந்தால் ,
எதையாவது ஊற்றி அழித்துவிடுவேன் !
எனக்காக அரும்பாத இதயத்தின் எண்ணம்
எனக்கெதற்கு ?
பார்த்து பார்த்து ரசித்த
உன் பார்வை படுத்தும் பாடு
மிகக்கொடித்து !
விழுப்புண் ஆணுக்கு அழகு !
விழிப்புண் உண்மையில் கொடிது .
நான் ...,
பறக்கநினைக்கும் போதெல்லாம்
பணிவிழுந்து பதத்துப்போகும் சருகாகிப்போகிறேன்
உன் நினைவால் !
நான் உரக்க காத்துக்கிறேன்
ஊருக்கே கேட்கிறது
உனக்குமட்டும் கேட்கவில்லை .
என் காதலி !....
கலையும் கனவினில் வந்து போகிறாள்
கலையாதோர் இன்பக் கவிதை யாகிறாள்
பூமி புத்தகம் திறந்து காட்டிய
புதிய பூவென பிறந்த மகளிவள்.
என் தாயின் சேலையின் தலைப்பை போன்றவள்
பூவை இனத்திலோர் புதிய வரவினல்
கருகூட்டி வளர்ந்திடும் இன்ப காதலால்
உயிரான ஓவியம் போல வாழ்கிறாள்.
மாலைநேரம் என் மனதை ஆள்கிறாள்
மலர்ந்த மனதில் தேன்துளியாய் விழுகிறாள்.
சாலை மலர்களாய் உதிர்ந்து ஓடுமவள்
லீலை நாடகம் நினைவை அள்ளுதே !
அரும்பும் மலர்களில் இருக்கும் தேனென
உருகி உருகி என்னுள்ளே பாய்ந்தவள்,
ஊமை வாயெனை உளற வைக்கிறாள்
உளறும் நவிலவள் நாமம் இசைக்கிறாள்.
தேகம் சமைக்கிறாள் தீண்ட தடுக்கிறா
ஏய் !..சமுதாயமே !
என்ன பார்க்கிறாய் ?!
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறென்றோ ?.
கேள்....,
அன்னப்பறவையாய்
பகுத்து தவறென்றால் ,
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறுதான்.
உப்பின் உவர்ப்பின்
உடன்படு தவறென்றால் ,
பெண்ணின் ஆணின்
நட்பது தவறுதான்.
பால்பிரித்து பழகுவதே நட்பென்றால்,
நட்பென ஓன்று இருப்பதே தவறுதான்.
நட்புணர்வு என்னவென்று-
தெரியுமோ உமக்கு.
தெரிந்திருந்தால் அந்நியரை
தடம் பாதிக்க விடுவாயோ?!.
நட்புணர்வே தெரியாத நீ
நட்போரை நகைப்பதும்
பழமையை விதைத்து
பயிராக்க பார்ப்பதும் முறையோ jQuery171026712429258255743_1552677062773?!
-கங்கைமணி
....
தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்....
அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் ( 👉 ) சேலைதான்
ஈரமானது...
நான் உறங்க...
உன் ( 👉 ) சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்தது
உன் (👉)சேலை தான்...
எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் (👉)சேலை தான்
எனக்கு திரையானது...
நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் (👉)சேலை
தான் குடையானது...
நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் (👉)சேலை தான்...
மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் (👉)சேலை தான்...
மாம்பழம் தின்று
என் கை துடைத்ததும்
உன் (👉)சேலை தானம்மா...
திருநங்கை
ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை
முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது
நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி
கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்
கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை
முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு
பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த
பிறந்தநாள் வாழ்த்து.
என்ன கேட்டாய் என் நண்பா !
எனைப்பார்த்து கேட்டாய் ஏன் நண்பா !
வாழ்த்துன்னை சொல்ல வயதில்லை என்றோ ?!
வயல்வெளி நீராய் வற்றினேன் என்றோ!?
நான் உனை வாழ்த்தாது தூங்கினள் நன்றோ!
நண்பனின் பிறந்தநாள் மறப்பவர் உண்டோ ?!!
கண்ணொளி மறைப்பது இமையே!...ஆயினும்
காப்பதும் அதுவே ஞாபகம் கொள்.
பொன்னெடுத் துன்னிடம் வரவில்லை யேனும்,
பொருளெடுத் துன்னிடம் தரவில்லை யேனும்,
கண்ணெடுத் துன்னெழில் காணேன் ஆயினும்.
கண்ணினும் மேல்..,கருத்தினும் மேல்..,
என்னுயிரினும் மேல்..,இவ்வுலகினும் மேல் என.,
மூவுலகறிந்தவர் ஆன்றோர் சான்றோர் ..,
ஆயிர யுகங்களாய் போற்றியே புகழ்ந்திட்ட
நற்ப்பெரும்