ஏய் சமுதாயமே

ஏய் !..சமுதாயமே !
என்ன பார்க்கிறாய் ?!
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறென்றோ ?.

கேள்....,

அன்னப்பறவையாய்
பகுத்து தவறென்றால் ,
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறுதான்.

உப்பின் உவர்ப்பின்
உடன்படு தவறென்றால் ,
பெண்ணின் ஆணின்
நட்பது தவறுதான்.

பால்பிரித்து பழகுவதே நட்பென்றால்,
நட்பென ஓன்று இருப்பதே தவறுதான்.

நட்புணர்வு என்னவென்று-
தெரியுமோ உமக்கு.
தெரிந்திருந்தால் அந்நியரை
தடம் பாதிக்க விடுவாயோ?!.

நட்புணர்வே தெரியாத நீ
நட்போரை நகைப்பதும்
பழமையை விதைத்து
பயிராக்க பார்ப்பதும் முறையோ jQuery171026712429258255743_1552677062773?!

-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (16-Mar-19, 12:40 am)
சேர்த்தது : கங்கைமணி
பார்வை : 269

மேலே