பரசுராம்

நண்பன் பரசுராம்...
தாய் தந்தை உயிரூட்ட..
உற்றார் உறவினர் சீராட்ட..
ஆசிரியன் ஆசிரியை அறிவூட்ட..
தோழர்கள் தோழியர் பாராட்ட..
வாழ்வில் உயர்ந்திட்டாய்...

ஏழே ஏழு
பொறியியற் கல்லூரி
இருந்த காலம்..
அதிலொன்றில் அரசுப்
பொறியியல் கல்லூரியில்
சேர்ந்ததால் நீ
நல்ல மாணவன்...

வாலிபால் போன்ற
விளையாட்டுக்களில்
நல்ல விளையாட்டு வீரன்...
இன்று நல்ல ஆசிரியன்..
வேறென்ன வேண்டும்
வாழ்வில் சிறந்த
வெற்றியாளன் நீ
எனச் சொல்ல...

இருளப்பபுரம்.. ஊர்..
இருள் ஊரின் பேரில்...
ஒளிமயம்.. அது
பரசுவின் வாழ்வில்...

பரசு எனும் ஆயுதம்
தாங்கிய பரசுராம்
காவியத் தலைவன்...
பீஷ்மர்.. கர்ணனுக்கும்
போர் வித்தை கற்றுக்
கொடுத்த வீரன் அவன்...

நண்பன் பரசுராம்...
எலக்ட்ரானிக்ஸ் ஆயுதம் கொண்டு
பொறியாளர்களை அழகாய்
உருவாக்கும் பொறியாளன்...
ராக்கெட்டுகளும் ஏவுகணைகளும்
உருவாக்குவான் இவனது மாணவன்...

பரசுராம்...
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் பல பெற்று...
👍🌹🙏🙋‍♂😀🎂🍰🌷💐

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (14-Mar-19, 4:29 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 207

மேலே