நுங்கு

நுங்கு

பாலை வனத்துக்குள்ளே பாய்ந்திருக்கும் வெயில் இங்கே
காய்ந்திருத்தல் ஆகிடுமோ வாய்த்திருக்கு குளிர் நுங்கு..!

நாவறண்டு போகையிலே வாங்கியுண்பாய் நுங்கதுவும்
தாகம் தீர்த்திடுமே ஊட்டி உடன் வந்திடுமே

கிளையற்ற மரத்தினிலே குலை குலையாய் தொங்கிடுதே
விலைமலிவு குளிருணவு களைப்பகற்றும் ருசித்துண்ணு..!

கிராமத்தில் வாழ்ந்திருந்தால் சுற்றிலுமே கிடைத்திருக்கும்
நகரத்தில் வாழ்கின்றோம் நாம் தேடி பெற்றிடுவோம்..!

நோய் தீர்க்கும் அருமருந்து வயிற்றுப்புண் வாய்ப் புண்ணும்
யாவையுந்தான் போக்கிடுமே ஏழைக்குந்தான் எள்ளுருண்டை..!

கர்ப்பிணிப் பெண்களுக்கு அற்புதமாம் இந்நுங்கு
பற்பல சத்திருக்கு உண்போர்க்கு நல்மருந்து ..!

புட்டிப்பால் குழந்தைக்கு புகட்டாதீர் தாய்மாரே
நுங்கதனை நிதமுன்ன வற்றாதே சுரக்கும்பால்..!

மார்பினிலே புற்று நோய் வாராது தடுத்திடுமே
வாய் ருசிக்க உண்பீரே சோகை நோய் தீர்ப்பீரே..!

கொழுப்பாலே குண்டம்மா என்றேதான் பெயர் கொண்டோர்
வழுக்கு நுங்குண்டால் கொழுப்பெல்லாம் கரையாதோ..?

தோலுரிக்க சோம்பல் கொண்டோர் தலைசீவி உண்பாரே
வாலாட்டி நழுவிடுமோ அப்படியே சாப்பிடலாம்..!

இரு கண்ணும் சிறுநுங்கில் முக்கண்ணோ பெருநுங்கில்
எக்கண்ணும் காத்திடுமே நம்மை அது கண்ணாக..!

#சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (23-Apr-25, 5:40 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 4

மேலே