விடியலை அறிவிக்க போவது யார்
விடியலை அறிவிக்க போவது யார் ..?
விடியலை அறிவிக்க
காத்திருக்கிறது
பறவைகளின் குரல்கள்
எதிர் வீட்டு சேவல்
ஒன்று தொண்டையை
விறைத்து
அவைகளுக்கு முன்னால்
அவசரப்படுகிறது
இவைகளுக்கும் முன்னால்
கழுத்து மணி
ஒலிக்க பால் கறக்க
நடந்து கொண்டிருக்கிறது
காராம்பசுக்கள்
அயர்ந்து உறங்கியது
போல் அமைதியாய்
இருந்த ஊர்
மெல்ல மெல்ல
அசைவை காட்டுகிறது
குறுக்கும்
நெடுக்கும் நடந்து
கொண்டிருக்கும் மனிதர்களின்
அசைவுகளால்.!
விடியலை அறிவிக்க
போவது யார்?