விடியலின் குளுமை
விடியலின் குளுமை
இரவின் உலவில்
களைத்து போய்
விடியல் வருமுன்
அவசரமாய் நகர்கிறது
நிலவு
அதை இழுத்து
பிடிக்க முகில்கள்
முயற்சித்தும் நழுவித்தான்
செல்கிறது
கோபித்து நிற்கும்
மேகங்களை குளிர்விக்க
தன் புன்னகையை
சிதறவிட்டே தப்பிக்கிறது
நிலவு
சிதறவிட்ட புன்னகையில்
சொக்கிய மேகங்கள்
காற்றோடு சரசமிட
மயங்கிய காற்றோ
சட்டென்று குளிர்ந்து
வீசியபடியே இருக்கிறது
விடியல் காலையின்
குளுமை காற்று
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
