நண்ப
நண்ப..
உணர்வுகள் என்பது
எண்பதிலும்
அன்பது முன்பது
வார்த்தைகளை உண்பது
பார்வைகளால் தின்பது
அன்று !
கால் சட்டை நாட்களில்
தோள்தொட்டு அளவளாவி
காய்விட்டு கரைந்தோம்
வாய்விட்டு மலர்ந்தோம்
கைகொட்டி சிரித்தோம்
இன்று !
நரைகளில் முகத்
திரைகளில் உலவுகையில்
"ங்க" என்று விளித்தாலும்
இளகுது இதயம்
நெகிழுது நெஞ்சம்
மகிழுது மனம்
நாளை ..
காலம் கொடுக்கும்
பிரிதொரு வாய்ப்பு
சந்திப்போம்
சிந்திப்போம்
திதிப்போம்..
௩௫ (35 ) ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பள்ளி நண்பரை சந்தித்தேன் . நாங்கள் ஒரே இருக்கையில் ஒன்றாக அமர்ந்திருந்தவர்கள் . தற்பொழுது அவர் ஒரு மாவட்டத்தின் ஆட்சியராக (IAS ) உள்ளார் . இருவரும் சந்தித்துக்கொண்ட பொழுது சிறிது நேரம் வார்த்தைகள் வரவில்லை .உணர்வுகள் மட்டுமே உலவின அங்கே .அப்போது என் மனதில் ஓடிய வரிகளை மேலே தந்துள்ளேன் .
அன்புடனும் வசிகரன்.க என்கிற சிவகுமார்