வசிகரன்க என்கிற சிவகுமார் க - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வசிகரன்க என்கிற சிவகுமார் க |
இடம் | : Hosur |
பிறந்த தேதி | : 01-Jun-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 1327 |
புள்ளி | : 233 |
எழுதப் பழகுகிறேன் , எழுதிப் பழகுகிறேன் . உலாப் போகும் நிலாக் காலம் என்னுடைய முதல் கவிதை புத்தக தொகுப்பு . வெளிவந்தது 2012 ஜனவரி திங்களில் . உணர்ச்சிகளை என்னக்கு தெரிந்த தமிழில் அந்த புத்தகத்தில் சொல்லி இருந்தேன் . கவிதை எனக்கு சுவாசம் என்றால் கதை எனக்கு ஒளி .இந்த இரண்டையும் இணைத்தே பயணிக்கிறேன் .என் எழுத்து மீதான உங்கள் கருத்துகள் என்னை மேலும் மெருகேற்றும் .நல்ல அல்லது அல்ல கருத்துக்கள் என்று எதுவாயினும் அது என்னை மேலும் மேலும் மெருகேற்றும் என்பதில் ஐயமில்லை . என்னை தொடருங்கள் அதன் மூலம் என்னை மென்மேலும் துலக்குங்கள் . எழுத்தை சுவாசிப்போம் ,எழுத்தாய் வாழ்வோம்,எழுத்தோடு வாழ்வோம் . rnrnrnஇதுவரை நான் எழுதியுள்ள புத்தகங்கள் rnrn 1 . உலாப்போகும் நிலாக்காலம் --௨௦௧௨ ஜனவரி ,நிவேதிதா பதிப்பகம் சென்னை ,சென்னை புத்தக விழாவில் வெளியிடப்பட்டது -- கவிதை தொகுப்பு rnrn2 .இப்படிக்கு "நான்" ஜனவரி 2020 இ-புக் அமேசான் , கவிதை தொகுப்பு . என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு " யாரோ சில மனிதர்கள் " 29th ஏப்ரல் 2020 அன்று வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
என்னுடைய ப்லோக் ஸ்பாட் https://vasikarapriyan.blogspot.com/ , குழலோசை . விவரங்களுக்கு விரிவான ஆக்கங்களுக்கு என் ப்ளாக்கை பின் தொடர்க . நன்றி !
நான் எழுதிய நூல்கள் :
உலாப் போகும் நிலாக் காலம் -- கவிதை தொகுப்பு
இப்படிக்கு நான் -- கவிதை தொகுப்பு
யாரோ சில மனிதர்கள் -- சிறுகதை தொகுப்பு
பனையில் மொத்தம் 34 வகைகள் இருக்கின்றன . அவைகள் வருமாறு
ஆன் பனை
பெண் பனை
கூத்தப்பனை
தாளிப்பனை
குமுதிப்பனை
சாற்றுப்பானை
ஈச்சம்பனை
ஈழப்பனை
சீமைப்பினை
ஆதம்பனை
திப்பிலிப்பனை
உடலற்ப்பனை
கிச்சிலிப்பனை
குடைப்பனை
இளம்பனை
கூறப்பனை
இடுக்குப்பனை
தாதம்பனை
காந்தம்பனை
பாக்குப் பனை
ஈரம்பனை
சீனப்பனை
குண்டுப்பனை
அலாம்ப்பனை
கொண்டைப்பனை
ஏரிலைப்பனை
ஏசறுப்பனை
காட்டுப்பனை
கதலிப் பனை
வலியப்பனை
வாதப்பனை
அலகுப்பனை
நிலப்பனை
சனம்பனை ..
நன்றி !
மரங்களை பற்றிய சில அறிய தகல்வல் இதோ உங்களுக்காக ...
போதி மரம் என்பது அரச மரம்
அரசமரக் காற்று வயிறு தொடர்பான நோய்களை போக்கும் .
இந்தியாவின் தேசிய மரம் ஆல மரம்
அர்ஜுனனுக்கு க்ரிஷணன் உபதேசித்தது ஓர் ஆலமரத்தடியில்
புங்கை மரநிழல் உடலுக்கு மிகவும் நல்லது
வேப்ப மரக்காற்று உடலுக்கு நன்மை தருவது
வாகை மரத்தழை வாயு தொல்லையைப் போக்கும்
அதிக மணம் வீசும் மரம் -- சந்தனம்
பல் குச்சிக்கு ஆல விழுது சிறந்தது
மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழலை தரக் கூடியது .
மனிதன் ஒரு நாளைக்கு மூன்று ஆக்ஸிஜன் உருளைகள் அளவு ஆக்ஸிஜன் சுவாசிக்கிறான்.
ஒரு ஆக்ஸிஜன் உருள
பழந்தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள்
விளாந்தர் /ஒளிக்கூண்டு (அரிக்கன் விளக்கு )
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக்கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு .
அம்மி
குழவி கொண்டு மிளகாய் , தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல் .
அண்டா
அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம் .
அடுக்குப்பானை
ஒன்றன் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை ) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு . இதில் உப்பு , புளி , தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர் .
அடிகுழாய்
கைபிடியைப
தமிழ் கூறும் நல்லுலகில் நீர்நிலைகளுக்கு அவற்றின் பயப்பாட்டிற்கு ஏற்றாற்போல் பெயர்கள் வழக்கப்பட்டிருந்தன என்ற விபரங்கள் நம்மில் எத்துனைப் பேருக்குத் தெரியும் ? விபரங்களுக்கு கீழே தொடர்ந்து படியுங்கள் .
ஏரி --irrigation tank ; வேளாண்மை செய்ய ஏற்படுத்தப்பட்ட நீர்த்த தேக்கம் .
குளம் --Bathing tank --ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்க பயன்படும் நீர்நிலை
நடை கேணி --Large with steps on one side -- இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
சேங்கை --Tank with duck weed --பாசிக்கொடி மண்டிய குளம் .
கால் --channel --நீரோடும் வழி
பிள்ளைக்கிணறு ---well in middle of a Tank --குளம் ஏரிய
சைவத் திருமுறை பனிரெண்டு என்பது நாமறிந்த செய்தி . அந்த திருமுறைகளின் வரிசை கிரமம் மற்றும் அதன் ஆசிரியர்கள் விவரங்கள் இதோ .
முதல் திருமுறை : தேவாரம் -- ஆசிரியர் -- திருஞானசம்பந்தர் , மொத்தமுள்ள பாடல்கள் 1469
இரண்டாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருஞானசம்பநதர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1331
மூன்றாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருஞானசம்பநதர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1358
நான்காம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருநாவுக்கரசர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1070
ஐந்தாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருநாவுக்கரசர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1015
ஆறாம் தி
திருமந்திரம் ஒரு வாழ்வியல் நூலாகும் . இதில் கூறப்பட்டுள்ள அளவிற்கு சூட்சும உலக ரகசியங்கள் குறித்த தகவல்கள் வேறு எந்த நூலிலும் இல்லை . சிவயோகம் என்ற புதிய யோகா முறையையே உருவாக்கித்தந்திருக்கிறார் திருமூலர் . திருமந்திரம் அள்ள அள்ள குறையாத ஒரு அமுதசுரபி . வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் ஒரு வாழ்வியல் நூல் . யோக நெறிகளை விளக்கும் யோக சூத்திரம் . தந்திர வழிகளை உணர்த்தும் தந்திர நூல் . சூட்சும செயல்களை கூறும் ஒரு மறை நூல் .
" நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லவும்
ஊன் பற்றி நின்ற உணர்வது மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே "
குட்டிப் பெண்ணே ..
சுட்டிப் பெண்ணே ..
சற்று நில்லேன்
என்னை இறுக
கட்டிக் கொள்ளேன் ..
நீ தவழும் அழகு
உன் உமிழும் உதடு
மழலை இதழு - அது
மலரும் உலரும் தமிழு
எல்லாம் அழகோ அழகு ..
இரவு இரவு - அது
தந்த புதுவரவு வரவு
நீ உறவு உறவு
புத்தம் புதுவுறவு உறவு
நிறைவு நிறைவு மனதுக்கு
நிறைய நிறைவு நிறைவு
பருகு பருகு - மழலை
இன்பம் பருகு பருகு
பழகு பழகு - மகளேநீ
அழகு அழகு - உந்தன்
இதழு இதழு அதுபேசும்
தமிழு தமிழு - பார்க்கும்
இதயத்தில் பழுது பழுது ..
பிள்ளைக்கனி அமுது அமுது
அதை தினம் பருகினால்
இல்லை பிணி - இனி
நல்ல கனி - அடிமனதில்
நனியது அழகுக்கு அணி ..
தமிழ் போன்று வளமிக்க பழமையான வாழும் மொழி வேறொன்று இருக்கும் என்று நான் நம்பவில்லை . லட்சக்கணக்கான சொற்களை கொண்ட தமிழ் மொழியின் பல ஆயிரக்கணக்கான அருமையான வாழ்த்தைகளை நாம் இன்று பயன்படுத்தவில்லை அல்லது அடுத்ததலைமுறைக்கு எடுத்து செல்ல தவறி இருக்கிறோம் என்பது வேதனையான ஒரு செய்தி . வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் பேசுங்கள் , அவர்களுக்கு தமிழ் வார்த்தைகளை தமிழின் பெருமையை , தாய் மொழியின் இன்றியமையாமையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லிக்கொண்டே இருங்கள் . மற்ற மொழிகளை கற்பதில் எந்த தவறும் இல்லை , அதே நேரத்தில் தமிழர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பான எல்லா செயல்களும் தமிழில் தான் இருக்க வேண்டும
சில பயனுள்ள (சரியான பொருளில் கொண்டால் ) வேளாண்மை தொடர்புடைய பழமொழிகளில் இங்கே அறிவோம் .
புற்று கண்டு கிணறு வெட்டு
வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்
காணி தேடினும் கரிசல் மண் தேடு
களர் கெட பிரண்டையைப் புதை
கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலை கரந்தை
கடை நிலம் எருக்கு
களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு
குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை
ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்
கூளம் பரப்பி கோமியம் சேர்
ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
தொல்காப்பியத்தில் , தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , எத்தனை வகை பேச்சுகளை குறிப்பிடுகிறார் என்பதை கீழே பாருங்கள் .
பேசு ( Speak )
பகர் (speak with data )
செப்பு (speak with answer )
கூறு ( speak categorically )
உரை ( speak meaningfully )
நவில் ( speak rhymingly )
இயம்பு ( speak musically )
பறை ( speak to reveal )
சாற்று ( speak to declare )
நுவல் ( speak with introduction )
ஓது (speak to recite )
கழறு ( speak with censure )
கரை ( speak with calling )
விளிம்பு ( speak with a message )
தமிழ் மொழியின் சொல்லாக்கங்கள் -- ச
தற்கால தமிழ்ப் படைப்புலகின் தலை சிறந்த எழுத்தாளர் திரு எஸ் ரா . புதினங்கள் , சிறுகதைகள் , கட்டுரைகள் , நாடகங்கள் , குழந்தைகளுக்கான ஆக்கங்கள் , திரைக்கதை , திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு தனது உரைகள் , பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள் , திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் .
சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது .
வாழ்க்கைக் குறிப்பு :
விருது நகர் மாவட்டம் மல்லாங்கிணற்றை சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம் , மங்கையர்க்கரசி என்போராவர் . இவரது தந்தை வழி தாத்தா திராவிட
நட்பென்ற ஒன்று அதற்கு,
விருப்பில்லை வெறுப்பில்லை
வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்லை
எனக்கில்லை உனக்கில்லை
என்ற கணக்கு அதற்கில்லை
கட்டியணைக்கலாம் நண்பனோடு
கன்னம் தொட்டு உரசலாம்
தோள் தட்டி பேசலாம்
துன்பந்தனை கொட்டி யழலாம்
ஆறுதல் தேறுதல் பெறலாம்
பட்டுவிடாத மொட்டை மரமொன்று
பற்றுகொண்டு பல்லாண்டு கழித்து
மொட்டு விடலாம் மலரும் வரலாம்
கனியும் தரலாம் கூடுதல் பலமும் பெறலாம்
அரிய வரமென்பது நட்பு
அதை தொடர்வதில் எதுதப்பு
நட்பு என்பது கற்பு
உள்ளார்ந்த உள்ளங்களின் தொகுப்பு
நெஞ்சமும் நெஞ்சமுந்தனே அதனுருப்பு
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தானே
அதன் உயிர்ப்பு
இறப்பு என்ன