நட்பென்ற ஒன்று

நட்பென்ற ஒன்று அதற்கு,
விருப்பில்லை வெறுப்பில்லை
வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்லை
எனக்கில்லை உனக்கில்லை
என்ற கணக்கு அதற்கில்லை

கட்டியணைக்கலாம் நண்பனோடு
கன்னம் தொட்டு உரசலாம்
தோள் தட்டி பேசலாம்
துன்பந்தனை கொட்டி யழலாம்
ஆறுதல் தேறுதல் பெறலாம்

பட்டுவிடாத மொட்டை மரமொன்று
பற்றுகொண்டு பல்லாண்டு கழித்து
மொட்டு விடலாம் மலரும் வரலாம்
கனியும் தரலாம் கூடுதல் பலமும் பெறலாம்

அரிய வரமென்பது நட்பு
அதை தொடர்வதில் எதுதப்பு
நட்பு என்பது கற்பு
உள்ளார்ந்த உள்ளங்களின் தொகுப்பு
நெஞ்சமும் நெஞ்சமுந்தனே அதனுருப்பு

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தானே
அதன் உயிர்ப்பு
இறப்பு என்ன இறப்பு
அதுயில்லாத ஒரு பிறப்பு
அதுவே அதன் சிறப்பு

நட்பென்ற ஒன்று அது
தினமும் வளர்கின்ற குன்று
நமக்குள்ளும் அது உண்டு
இனிமைதரும் என்றும் என்று
அனுபவித்த உள்ளம் எல்லாம்
ஆர்பரிப் தெல்லாம் உண்மை

சுழ்நிலை மாறலாம்
வானிலை மாறலாம்
வாழ்நிலையும் மாறலாம்
நட்பென்பது நன்று
அது என்றென்றும்
மாறாத ஒன்று !

எழுதியவர் : வசிகரன்.க (16-Jan-16, 5:39 pm)
Tanglish : natpendra ondru
பார்வை : 1007

புதிய படைப்புகள்

மேலே