சமர்ப்பணம்

வெற்றுக்காகிதமாய் நானிருந்தேன்
விரைவினில் பதவலாய் ஆவேனோ என நான் தவித்தேன்..

உங்கள் பேனா முனை கொண்டு பேசிய வரிகள்
ஒவ்வொன்றும் எழுத்துக்களாக என்னில் பதிக்க நான் விண்ணில் ஜொலித்தேன்..

என்னில் பதிந்த உங்கள் ஒவ்வொரு வரிகளாலும்
என் வெற்றுக்காகிதம் காவியம் ஆனது..

சகாப்தங்கள் பல கடந்தாலும் தேசங்கள் பல பிரித்தாலும்
இந்தக்காவியம் என்றுமே உங்களுக்கு சமர்ப்பணம்..

எழுதியவர் : parshaan (16-Jan-16, 11:35 am)
Tanglish : samarppanam
பார்வை : 254

மேலே