பர்ஷான் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பர்ஷான் |
இடம் | : இலங்கை (சாய்ந்தமருது) |
பிறந்த தேதி | : 19-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 589 |
புள்ளி | : 196 |
பெயர்: முஹம்மது பர்ஷான்
இடம்: இலங்கை
முகநூல் முகவரி: https://www.facebook.com/mohamed.rifarzkan
அன்பான மனைவிக்கு ஆழமான கவிதை ஒன்றை கிறுக்குகிறேன் இப்போது...
கவிதையாகிறது உன் காதல் கற்பனையில் உன்னை சுவாசிக்கையிலே...
என் ஆழ்மனதில் வேரூன்றி வளர்ந்த உன் காதலும் ஓர் காவியமே...
சிகரம் தொட சற்று ஆசை,
காற்றாக நீ வந்தால் தூசாக பறந்தேனும் தொட்டு விடுவேன் என்கிறேன், நீயோ என்னை விட்டு விடு என்கிறாய்...
மர உச்சியில் ஏற்றிவிட்டு இடைநடுவில் வெட்டி விடப் பார்க்கிறாய்...
பாரமாக இருந்தால் இறக்கி விடு அல்லது இறங்க விடு உன் பாதமே சரணமென முடங்கிக் கிடக்கிறேன்...
நீ தொலைத்துவிட்டுச் சென்ற காகிதங்கள் எல்லாம் என்றோ நான் உனக்கு கிறுக்கிய கவிதைகள்...
கவிதைகள் பொய்யாகலாம் ஆனால் அதில் புதைந்துள்ள அர்த்தங்கள் அவ்வளவும் ஆழமானவை ஆத்மார்த்தமானவை...
இன்று நீ வீசியெறிந்த என் கவிதைத்துளிகளால் உன் காதல் பொய்யாகலாம் ஆனால் என் காதல், என் காதல் காகிதங்களால் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டியை விட அழகானவை அர்த்தமானவை...
விடியாத இரவு வேண்டும் அதில் விடியும் வரை கனவு வேண்டும் அந்த கனவில் நீ வர வேண்டும்...
நினைவுகளாலே என் உள்ளம் நிறைத்தது நீதானே
உனக்காய் துடிப்பதில் சோர்வுறாதது என் இதயம்தானே....
தமிழ்ப்பற்று...
அறிவென்னும் சுடரை ஏற்றி வைத்தது...
ஆழமான உண்மைகளைப் புரிய வைத்தது..
இன்பம் தரும் வாழ்வியலைக் கற்றுத் தந்தது..
ஈகைத் தன்மையைப் பெருகச் செய்தது...
உலகம்போற்றும் தமிழை உயிராக்கித் தந்தது...
ஊரெல்லாம் போற்றும்படி உழைக்கச் சொன்னது....
எல்லாம் மாயை என்று எதார்த்தம் சொன்னது...
ஏட்டுப் படிப்போடு திருப்திகொள்ள வேண்டாம் என்றது...
ஐயமிட்டு உண்பதே சிறப்பெனச் சொல்லித் தந்தது...
ஒண்டியாக வாழ்வது கடினம் என்றது...
ஓய்வை நாடி புத்துணர்ச்சி பெறச் சொன்னது...
ஒளவை சொன்ன ஆத்திச்சூடியில் வாழ்க்கையை கற்பித்தது....
கடலோரம் இவள் சென்றால்
கடலலைகளெல்லாம் கூச்சலிடுகின்றன
இவள் பாதம் தொட...
மழை முகில்களெல்லாம் மோதிக்கொள்கின்றன
மழைத்துளியென மாறி இவள் மேனி கழுவ...
மாலை நேரத் தென்றல் காற்றெல்லாம்
தேடி அலைகின்றன
இவள் தேகமெல்லாம் தொட...
உனக்காக காத்திருக்கும் போது
எனது கனங்களும் உன்னை காதலிக்கின்றது...
உன்னோடு பேசும் போது
எனது மொழிகளும் இனிமை பெறுகின்றது...
உனக்கென கடிதம் எழுதும் போது
எனது கைய்யெழுத்துகளும் அழகு பெறுகின்றது...
உன்னை நினைக்கும் போது
என் உள்ளங்களிலும் கவிதை பிறக்கின்றது...
கண்ணுறங்கும் போது
எனது கனவுகளும் உன்னை சுமக்கின்றது...
தூரத்தில் நிலா அருகினில் நிழல்...
தொட துடிப்பது நிலாவை தொட்டுக்கொண்டிருப்பதொ நிழல்...
நிலா நீ மறைந்து போ என் நிழல் ஒழிந்து போகட்டும்..
இருள் மட்டும் போதும் நான் மறைந்து கொள்கிறேன்...
பர்ஷான் ......
நீ தந்த ஏமாற்றங்களின்
வலிகளை கொண்டு
என் கரத்தை கூர்தீட்டி
உன் கல் நெஞ்சை
இருமுறையேனும் குத்தி,
இன்னும் என் காதல்
எத்தனை ஆழமானது என
நீ உணரும் விதமாய்
உனை இறுகப்பற்றி
வேதனைகள் மொத்தமும்
என் விழிகள் சிந்தும்
செந்நீரில் கரைத்து விட்டு
உன் சட்டையினை இழுத்து
என் கண்ணீரை
துடைத்துக் கொண்டு
" சரி தான் போ டா" என்று
உன்னை தூக்கி
எறிந்து விட்டு
வரவேண்டும் நான்!!!!
இப்படியாக ஒருமுறையேனும்
நான் உனை
பழிதீர்க்க வேண்டும்.....
மகன் என்று அழைக்கும் உங்கள் அழைப்பில் என்றுமே அன்பின் அளவு குறைந்ததே இல்லை...
நிஜத்தினில் மறைந்தாலும் நினைவினில் நிஜங்களாய் இன்னும் என்னுள் வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்...
தனிமையை உங்கள் நினைவு கண்ணீர்களாக்கினாலும் உங்களுக்காக பிறார்த்திக்கும் கணம் போதும்...
ஆயிரமாயிரம் தடவை எனக்காய் இறைவனிடம் ஏந்திய உங்களுக்கு என் ஆயுள் வரை ஏந்தி கொண்டே இருப்பேன் உங்கள் சுவன வாழ்க்கைக்காக..
பர்ஷான்
எனக்குள் எனை நான்
தேடினாலும்- கிடைப்பதோ
விடையாய் நீயொருவனே...
துடிக்கும் இதயம்தனில்
சிரிக்கும் கண்ணனாய்
துளிர்ப்பவனும் நீயொருவனே...
அனைத்தும் நீயாய்
மாறியதன் மாயமோ,
அறியேன் நான்...
தூறும் நினைவினுள்
நானும் நனைகிறேன்
தாகம் தீராமலே...
நீளும் மௌனங்களில்
நாளும் அடைகிறேன்
நரக வேதனையே ...
தேடும் உயிர் அது(வு)ம்
தேய்பிறை காட்டுதே
தேகம் சேராமலே...
வாழும் ஆசை அது(வு)ம்
வாடிச் சரியுதே
வார்த்தை கேளாமலே...
பேசி விடு உயிரே,
அன்றேல் - எனை
கொன்று விடு இன்றே..!