♡ இளைய தோழன் ®™♡ - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ♡ இளைய தோழன் ®™♡
இடம்:  கன்னியாகுமரி
பிறந்த தேதி :  11-Dec-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2016
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சிம்பிளா சொல்லனும்னா அதிஷ்டம் என்பதை காலண்டரில் மட்டுமே கொண்டவன்.

என் படைப்புகள்
♡ இளைய தோழன் ®™♡ செய்திகள்

தகப்பன் சாமி...!

அப்பாவின் தோள் மீது ஏறி சாமி பார்க்கும் பால்யத்தில் தெரிந்ததேயில்லை சாமியின் தோள் மேல்தான் இருக்கிறோம் என்று...!

பெரும்பாலன தகப்பன்களின் நிலையும் இதுதான் அவர் தோள் மீதிருக்கும்போது புரியவதில்லை.

பத்து வயது வரை அப்பாதான் ஹீரோ .. 
இருபது வயது வரை எதிரி போல..
நாற்பது வரை யாரோ போல...
அதற்கு மேல அப்பாதான் கடவுளுக்கும் மேல.

வீட்டில் அம்மா இல்லைனா அடுத்த நொடியே அம்மாவாகி விடுவார்.
(வெளியே சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கதே நான் சமைக்கிறேனு சொல்லுவார் ஆனா அதை வாய்'ல வைக்கமுடியாது அது வேற விஷயம்)

அவர் சாப்பிடும் நள்ளிரவு நேரத்திலும் அவன் சாப்ட்டா'னானு கேட்ப்பார்.
அந்த ஒற்றை வார்த்தையில் ஒளிந்துயிருக்கிறது ஒட்டுமொத்த பாசமும்.

அப்பாவின் தியாகமும் பாரமும் புரியவேண்டுமெனில் அவர் தோளிலிருந்து இறங்கி பாருங்கள்,
அடுத்த நொடியே இந்த உலகம் உங்கள் தோள் மீது ஏறிக்கொள்ளும்.

நம்மை பத்து மாதம் சுமந்த அம்மாவின் கருவறை மட்டுமல்ல...
நம்மை சுமந்த அப்பாவின் தோள்களும் போற்றுதலுக்குரியதுதான்.

வாழ்க்கையில் வெற்றிபெற்ற எல்லா மகன்களுக்கு பின்னாலும்
வாழ்க்கையில் தோற்றாதொரு அப்பா நிச்சயம் இருப்பார்.

அம்மாவின் கண்ணீரை கடந்து விடலாம் ஆனால் அப்பாவின் கண்ணீரை அவ்வளவு எளிதாக கடக்கமுடியாது யுகம்யுகமாய் நெஞ்சில் நின்று கொல்லும்..

பெரும்பாலான தகப்பன்கள் மகன்கள் முன்னால் அழுவதில்லை
ஏனெனில் அதுதான் அப்பா...!

அப்பா ரொம்ப கோபக்காரர் என்ற உருவகத்தை அம்மா நம்மிடம் பதிய வைத்திருப்பார் காரணம் அது அம்மாவின் விளையாட்டு அரசியல்.

அம்மா நம்மளை வலிக்கதா மாதிரி அடிப்பங்க...
அப்பா நம்மளை அடிச்சிட்டு 
அவர் அழுவார்....

நமக்கு எப்போவும் வில்லனா தெரிவார்
நம்ம பிள்ளைகளுக்கு அவர் ஹீரோவா தெரிவார் டிசைன் அப்படி.

இதெல்லாம் எங்க உருப்படபோகுது'னு அம்மாவிடம் சொல்லிட்டு தனது நண்பர்களிடம் நான்தான் அவனை சரியாக புரிஞ்சிக்கலனு சொல்லும் மழலை மனசு'காரர்கள்'தான் தகப்பன்கள்.

நம்ம பிள்ளைகளின் மேல் பாசத்தை பொழியும் போதுதான் தெரியும் நம்ம அப்பாவுக்கு இவ்வளவு பாசம் இருக்குதானு, பாசத்தை கூட வெளியே காட்டத் தெரியாதா வெள்ளந்தி'தான் தகப்பன்கள்.

யாரை பற்றியும் தெரிந்து கொள்ள பழகினால் போதும் ஆனால் அப்பாவை பற்றி புரிந்துகொள்ள நம் அப்பா'வானல் மட்டுமே முடியும்

அம்மா சொல்லி முடிக்க முடியாத சரித்திரம்...!
அப்பா சொல்லப்படதா சரித்திரம்...!

MY FATHER IS NOT MY FATHER
HE IS MY GOD FATHER..!

மேலும்

♡ இளைய தோழன் ®™♡ - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2018 9:20 am

தமிழ்ப்பற்று...

அறிவென்னும் சுடரை ஏற்றி வைத்தது...

ஆழமான உண்மைகளைப் புரிய வைத்தது..

இன்பம் தரும் வாழ்வியலைக் கற்றுத் தந்தது..

ஈகைத் தன்மையைப் பெருகச் செய்தது...

உலகம்போற்றும் தமிழை உயிராக்கித் தந்தது...

ஊரெல்லாம் போற்றும்படி உழைக்கச் சொன்னது....

எல்லாம் மாயை என்று எதார்த்தம் சொன்னது...

ஏட்டுப் படிப்போடு திருப்திகொள்ள வேண்டாம் என்றது...

ஐயமிட்டு உண்பதே சிறப்பெனச் சொல்லித் தந்தது...

ஒண்டியாக வாழ்வது கடினம் என்றது...

ஓய்வை நாடி புத்துணர்ச்சி பெறச் சொன்னது...

ஒளவை சொன்ன ஆத்திச்சூடியில் வாழ்க்கையை கற்பித்தது....

மேலும்

நன்றி நண்பரே 21-Aug-2018 4:38 am
இனிமை 20-Aug-2018 5:06 pm
தரமான பதிவு மேலும் எழுதுக 18-Aug-2018 1:38 am
அருமையான படைப்பு, வாழ்த்துக்கள். 17-Aug-2018 10:06 pm

என் ‪‎காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது எவனோ ஒருவன் போல் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன் 

தாடி வளர்க்கும் வயதும் இல்லை போடி என்று சொல்ல மனமும் இல்லை,
என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள் அவரோடு நின்று
நிழற்படம் எடுத்து கொள்கிறாள்.

கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள் அவர் ஏதோ காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டு கொண்டிருக்கிறாள்.
அழகான கூரை புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல் இருக்கும் நெற்றியில் நெற்றிச்சுட்டி, நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில் மருதாணி போட்டிருக்கிறாள்,அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது. 

அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை அணிந்திருக்கிறாள் , அடிக்கடி என்னையும் பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல
யாருக்கும் தெரியாமல் . 
இருட்டிலே என்னோடு ‪‎கை கோர்த்துதவள்‬ இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்.

ஏமாந்தவன் எதிரிலே இருக்க இன்னொருவனுடன் உனக்கு திருமணம் இதற்கு நான் சாட்சியா என்று அக்னி கொழுந்துவிட்டு எரிகிறது.

அருகில் அவள் நட்புகள் சூழ்ந்திருக்கிறார்கள், தூரத்தில் எனக்கு துரோகம் இழைத்த நட்புக்கள் கூடி அவர்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்,
என் காதலை பிரித்ததில் அவர்களுக்கும் பெரிதும் பங்கு இருக்கிறது அவர்களை பார்க்க பார்க்க வேதனை பெரிதாகிறது, அவள் தாய் தந்தையும் சகோதரனும் இருக்கிறார்கள் நாம் பெற்ற பெண் எந்த தவறையும் செய்யவில்லை என்ற மன நிறைவோடு, 
அவள் கழுத்திலே தாலி கட்டப்போகும் கணவன் இருக்கிறான். 
பாசத்தோடு உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான் ‪ஊமையாக‬ இருக்கிறேன். 
அவள் என்னோடு பழகியதை நினைத்து பார்க்கிறேன் வெகுண்டெழுந்து வருகிறது ‪‎அழுகை‬ அதை கைகுட்டையும் கண்ணாடி வைத்தும் மறைக்கின்றேன்.
வெள்ளி தட்டில் அட்சதை வருகிறது நானும் அதை எடுத்துக்கொண்டேன், 
மந்திரங்கள் ஓத மேலங்கள் ஒலிக்க அவள் தலை குனிகிறாள் அவர் தாலியை கட்டி விட்டார் நானும் அட்சதை தூவினேன் எங்கிருந்தாலும் வாழ்க என்ற எண்ணத்தோடு.
அவள் என்னை பார்க்கிறாள்
இவனை பெரிதாய் ஏமாற்றி விட்டோம் என்ற எண்ணத்தில்.

இந்த வேதனைகள் அனைத்தும் போதுமென வெளியேர நடக்கின்றேன், கவலையும் தூரோகங்களின் வலியும் கண்ணீராக வெளியேர துடிக்கின்றது, அதற்கு இன்னேரம் உகந்தது அல்ல என அடக்கிக்கொள்கிறேன் .
வெளியே பட்டாசு சத்தங்கள் பலமாக ஒலிக்கின்றது ஆனால் என் காதல் மட்டும் அவள் கொஞ்சி பேசிய காதல் வார்த்தைகளே வந்து வந்து போகின்றது. 

அவள் ஏற்றிய காதல் நாடகத்தில் அழகாய் நடித்து முடித்து மணமேடை ஏறி விட்டாள்.
நடிக்க தெரியாத நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றேன்.
எல்லாம் முடிந்து விட்டது என்று அவள் எண்ணலாம் ஆனால் இதுதான் ஆரம்பம் என்று அவளுக்கு தெரியாது
அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூடாது என்பதற்காகவே அவளை விட்டு விட்டேன்
என் மனதில் நிலவை நின்று தொடும் அளவிற்கு கட்டிய காதல் கோபுரம் சித்தெரும்பை விட சிறியதாக சிதறி போனது. 

மேலும்

♡ இளைய தோழன் ®™♡ - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2017 1:56 pm

என் காதலியின் திருமணம் எதிரே நடந்து
கொண்டிருக்கிறது😞😒
எவனோ ஒருவன் போல் நான்
அமர்ந்து கொண்டிருக்கிறேன்

தாடி வளர்க்கும் வயதும் இல்லை
போடி என்று
சொல்ல மனமும் இல்லை

என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள்
அவரோடு
நின்று
நிழற்படம் எடுத்து கொள்கிறாள்

கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள்
அவர் ஏதோ காதருகில் சொல்ல
இவளும் கூர்ந்து கேட்டு கொண்டிருக்கிறாள்

அழகான கூரை புடவை கட்டி
மூன்றாம் பிறைநிலா போல்
இருக்கும் நெற்றியில் நெற்றிச்சுட்டி

நான் பிடித்து முத்தம்
கொடுத்த கைகளில்
மருதாணி போட்டிருக்கிறாள்
அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது

அவள் கழுத்தில் ஏறவே
வரம் வாங்கி வந்த மாலை

மேலும்

மன்னிக்கவும் தோழரே.. உங்கள் படைப்பு மிக அருமை.நான் ரசித்த பிறரின்அ ழகிய படைப்புகளை அவர்கள் பெயருடனே சமர்பிப்பேன். ஆனால் அவர்களின் பெயர்கள் வருவதில்லை. தொடரட்டும் உங்கள் படைப்புகள்.. 07-Sep-2017 5:18 pm
இது என்னோட படைப்பு 09-Aug-2017 1:19 am

என்னவள் தரும் முத்தம் இரண்டடி #திருக்குறள் போல் சட்டென முடிந்தாலும்

அதன் போதை #இராமாயணம் போல் நீள்கிறது.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே