ஜான் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜான்
இடம்:  அருப்புக்கோட்டை
பிறந்த தேதி :  11-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-May-2017
பார்த்தவர்கள்:  6416
புள்ளி:  480

என்னைப் பற்றி...

அன்பைத் தேடும் சிறுபறவை நான்....

என் படைப்புகள்
ஜான் செய்திகள்
ஜான் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2020 7:58 am

நீ !!!

பூமிக்கு தவறிவந்த தேவதையா!!

வானவில்லின் நிழலா !!

மயிலிறகின் நகலா !!

அன்பின் பிறையா !!

அழகின் அறிவியலா !!

கானங்களின் பிறப்பிடமா !!

ஓவியத்தில் அடங்கா ஓவியமா !!

பூக்களின் இளவரசியா !!

கவிதையின் மறையா !!

பட்டாம்பூச்சியின் வரைகலையா !!

விஞ்ஞானம் வியந்த படைப்பா !!

உலகம் அறியா அதிசயமா !!

சித்திரம் மயங்கின சிற்பமா !!

யார் நீ அழகே????

மேலும்

ஜான் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2019 12:34 pm

#அன்னையர் தின வாழ்த்துக்கள்...

அம்மா....

அளவிடமுடியா அற்புதத்திற்கு அம்மா என்று பெயர்....

நம்பிக்கை முற்றும் ஒழிந்த நேரத்தில் கடவுளைக் காட்டுவாள்....

தோல்விக்கும் நமக்கும் இடையில் நிற்பாள்....

மனம் பதறித் துடிக்கும் சூழலில் அமைதிப்படுத்துவாள்....

வீழாதிரு, விழித்திரு என்னும் இரகசியங்கள் சொல்வாள்....

நேசித்தலும், நேசிக்கப்படுதலுமே வாழ்வியல் என்பாள்....

உன் தழும்புகளைக் கேட்டுப்பார்; உனக்கான அவளது கண்ணீர்க் கதைகளைச் சொல்லும்.....

மேலும்

ஜான் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2019 4:45 pm

வீழ்த்தலாமென்று நினைத்தாயோ....

அதிகார தோரணையில்
அடக்கிட நினைத்தாயோ...

அன்புகாட்ட மறந்து அடிமையாக்க எத்தனித்தாயோ...

வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து வென்றிடுவாயோ....

பணம் கொண்டு பாசத்தின் திறவுகோல் செய்திடுவாயோ....

கோபக்கோரங்கள் கொண்டு ஒப்புரவு நிகழ்த்திடுவாயோ.....

அனுசரனையின் அர்த்தமறியாமல் ஐக்கியமென்னும் அற்புதம் நிகழ்த்திடுவாயோ....

மேலும்

ஜான் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2019 4:28 pm

பிறந்த தினம்...

அனுதினத்தேடலில் புதிய அத்தியாயம் வெற்றுப்பக்கங்களோடு ஐக்கியமானது...

கடந்தகால அனுபவங்கள் சில தடுமாற்றங்களை தடைசெய்திற்று....

கனத்த இதயத்திற்கு சில துரோகங்களை துடைத்தெறிய உத்தரவு கொடுக்கப்பட்டது....

இளகிய மனதை உடைக்க அன்பு மட்டும் அனுமதி பெற்றது....

இனி நெருங்கும் மனிதர்களை ஞானமாய் அணுக ஆலோசனை கிட்டிற்று....

துரோகங்களை எண்ணிப்பார்க்க மூளைக்கு தடை உத்தரவு கொடுக்கப்பட்டது....

அந்தஸ்துபார்த்து பழக முற்படும் கூட்டத்தைவிட்டு விலகியே நிற்க உறுதிமொழி ஏற்கப்பட்டது....

பாசத்திற்கு மட்டுமே பணிந்துபோக ஆலோசனை செய்யப்பட்டது...

மேலும்

ஜான் - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2018 9:20 am

தமிழ்ப்பற்று...

அறிவென்னும் சுடரை ஏற்றி வைத்தது...

ஆழமான உண்மைகளைப் புரிய வைத்தது..

இன்பம் தரும் வாழ்வியலைக் கற்றுத் தந்தது..

ஈகைத் தன்மையைப் பெருகச் செய்தது...

உலகம்போற்றும் தமிழை உயிராக்கித் தந்தது...

ஊரெல்லாம் போற்றும்படி உழைக்கச் சொன்னது....

எல்லாம் மாயை என்று எதார்த்தம் சொன்னது...

ஏட்டுப் படிப்போடு திருப்திகொள்ள வேண்டாம் என்றது...

ஐயமிட்டு உண்பதே சிறப்பெனச் சொல்லித் தந்தது...

ஒண்டியாக வாழ்வது கடினம் என்றது...

ஓய்வை நாடி புத்துணர்ச்சி பெறச் சொன்னது...

ஒளவை சொன்ன ஆத்திச்சூடியில் வாழ்க்கையை கற்பித்தது....

மேலும்

நன்றி நண்பரே 21-Aug-2018 4:38 am
இனிமை 20-Aug-2018 5:06 pm
தரமான பதிவு மேலும் எழுதுக 18-Aug-2018 1:38 am
அருமையான படைப்பு, வாழ்த்துக்கள். 17-Aug-2018 10:06 pm
ஜான் - ஜான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2018 3:26 am

என்னவள் எனக்காக பேசினாள்... 

காதில் பேசி, இதயத்தில் எதிரொலிக்கச் செய்தாள்... 

எண்ணங்கள்தோறும் நிழலாகவே பின்தொடர்கிறாள்... 

மனதில் நினைக்கின்றபோதெல்லாம், தேவதையாக தரிசனம் தருகிறாள்... 

அவள் பெயரை மிஞ்சும் வார்த்தைகளைத் தேடியும் புலப்படவில்லை...

மேலும்

ஜான் - ஜான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2018 3:24 am

நான் அடி தாங்காதவன்... 

அடி என்பது வலி மட்டுமல்ல, அவமானம்...

நான் அவமானம் தாங்காதவன்...

மேலும்

ஜான் - ஜான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2018 3:22 am

நினைவலைகள்...

படிப்பில் சாதிக்கவும் உழைக்கணும்னு அப்பா கொடுத்த நம்பிக்கை... 

மற்றவர்கள் சொல்வதெல்லாம் நீயில்லைன்னு அம்மா பேசின பொன்மொழிகள்... 

உன்கிட்ட திறமைக்கென்ன குறைச்சல்னு தம்பி பேசினவைகள்... 

எங்கண்ணன் இருக்கான்னு தங்கச்சி கொண்ட பெருமிதம்... 

நினைவூட்டலாக தொடர்கிறது நினைவலைகள்...

மேலும்

ஜான் - ஜான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2018 3:20 am

நகர வாழ்க்கை...

வாழ்க்கையை உயரம் நோக்கி நகர்த்துமிடம் நகரம்... 

நாகரிக மோகம் குவிந்து கிடக்குமிடம்... 

பணத்தை தேடும் பந்தயம் நடக்குமிடம்... 

மூடநம்பிக்கையை வியாபாரம் செய்யும் இடம்... 

மேதைகள் பலர் சங்கமிக்குமிடம்... 

வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வாய்ப்புகள் அள்ளித்தருமிடம்... 

அறிவு பெருத்து மனிதம் குறுகுமிடம்... 

அவசரகோலத்தில் அன்பை தொலைக்குமிடம்... 

ஆடம்பர வாழ்விற்கு அழைப்பு விடுக்குமிடம்... 

பாரம்பரியங்களை வியந்து பேசுமிடம்...

மேலும்

ஜான் - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2018 7:25 pm

மனைவியும் காதலும்...

வாழ்வை முழுமையாக்கும் புள்ளிகள்...

கோபத்தை வீழ்த்தும் ஏவுகணைகள்...

அன்பென்னும் மந்திரத்தை ஆழமாய் போதிப்பவர்கள்...

விதையாக இருக்கும் நம்பிக்கையை விருட்சமாக்குபவர்கள்...

செல்லாடலை அழகாக்கும் சிறப்புப் பயிற்சியாளர்கள்...

நோக்கமில்லாதிருந்த எண்ணங்களை சீர்படுத்துபவர்கள்...

குறைவை நிறைவாக்கி குடும்பத்தை கட்டுபவர்கள்...

அனுபவமற்ற பாதைகளில் வீறுநடை போடச்செய்பவர்கள்...

மேலும்

நன்றி நண்பரே 02-Aug-2018 6:12 pm
மனைவி மனம் போல் வாழ்க்கை .....வாழ்த்துகள் 02-Aug-2018 3:14 pm
ஜான் - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2018 10:39 am

தமிழின் சிறப்பு...

அகிலம் போற்றும் தமிழ்...

ஆளுமை செய்யும் தமிழ்...

இன்பம் பொழியும் தமிழ்...

ஈகையில் சிறந்த தமிழ்...

உரிமை பேசும் தமிழ்...

ஊக்கம் கொடுக்கும் தமிழ்...

எண்ணங்களை உயர்த்தும் தமிழ்...

ஏளனங்களை நொறுக்கும் தமிழ்...

ஐயம் இட்டு வாழும் தமிழ்...

ஒன்றுபடுதலை உணர்த்தும் தமிழ்...

ஓசையின்றி பெருமையாக வாழும் தமிழ்...

ஔஷதமாக அனைத்திற்கும் விளங்கும் தமிழ்...

மேலும்

நன்றி நண்பரே... 02-Aug-2018 8:26 am
ஜான் - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2018 9:04 am

உன் இதழோரம்...

உன் இதழ் பிரிகையில் மனதை மயக்கும் ஒலி வந்தது...

உன் இதழ் சுளிக்கும் அழகு சொக்க வைத்தது...

உன் இதழ் சிரிக்கையில் என் மனம் மகிழ்ந்தது...

உன் இதழ்மீது படர்ந்த சாயம் பொறாமைப்பட வைத்தது...

மேலும்

இதழ் சிரித்ததா அல்லது இதழ் சுவைத்த சாயம் சிரித்ததா ? நகைச்சுவையாக கேட்கிறேன் தவறாக நினைக்கவேண்டாம் 01-Aug-2018 6:02 pm
நன்றி ... 01-Aug-2018 10:08 am
உன் இதழ் மீது படர்ந்த சாயம் பொறாமை பட வைத்தது......... அழகு...... 01-Aug-2018 10:05 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (93)

innila

innila

சென்னை
வாசு

வாசு

தமிழ்நாடு
சத்யா

சத்யா

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (94)

இவரை பின்தொடர்பவர்கள் (96)

மேலே