அம்மா
#அன்னையர் தின வாழ்த்துக்கள்...
அம்மா....
அளவிடமுடியா அற்புதத்திற்கு அம்மா என்று பெயர்....
நம்பிக்கை முற்றும் ஒழிந்த நேரத்தில் கடவுளைக் காட்டுவாள்....
தோல்விக்கும் நமக்கும் இடையில் நிற்பாள்....
மனம் பதறித் துடிக்கும் சூழலில் அமைதிப்படுத்துவாள்....
வீழாதிரு, விழித்திரு என்னும் இரகசியங்கள் சொல்வாள்....
நேசித்தலும், நேசிக்கப்படுதலுமே வாழ்வியல் என்பாள்....
உன் தழும்புகளைக் கேட்டுப்பார்; உனக்கான அவளது கண்ணீர்க் கதைகளைச் சொல்லும்.....