முதியோர் இல்லம்
அரவம் இல்லா அறையில்
ஆர்வமின்றி அமைதியாய்
தூக்கி வளர்த்தவன்
தூக்கி எறிந்திருந்ததை எண்ணும் இதயங்களாய்
வருபவர்களில் தன் பிள்ளையை தேடி
மீண்டும் மீண்டும் ஏமாறும் விழிகளாய்
உடைந்த போன நம்பிக்கையில்
நிறைந்திருந்தாலும் வெறுமையாய்...
- முதியோர் இல்லம்