அவள்

சித்திரையில் பூத்துக் குலுங்கும்
வேப்பம் பூவாய்ப் பூத்திருந்தாள் பூவை
பருவத்தின் எழில் வண்ணம் பொங்க
பருவ மேனி கூத்தாட ஒய்யாரமாய்
ஆடி வந்தாள் அவள் - மாவின் செங்காய்போல்
கனிந்திடும் கனியாகும் வேளையில்
தீயவன் ஒருவன் கண்களுக்கு இறையானாள்
பதுங்கி பதுங்கி இறை தேடும் புலிபோல்
அவள் பின்னே அவன்………
அவளறியாது அவன் கைகளில் மாட்டிக் கொண்டாள்
புலியின் கையில் சிக்கிய மான்குட்டிப்போல்
வேட்டையாடிவிட்டான் பாவி …..
அங்கம் குலைய, அணிகலன்கள் குலைய
காம தாகம் தீர்த்துக்கொண்டான் காமுகன்
அப்படியே அலங்கோலமாய் அவளை
விட்டுவிட்டு ஓடிவிட்டான் தப்பி....
அதோ அவள் கனியாகும் முன் வெம்பிய
கனிபோல் வீழ்ந்துகிடந்தாள்.....
தாய் தந்தை சுற்றம் சூழ ….
செய்யாத பாவத்தின் வலியை சுமக்க
முடியாமல் பெரும் வேதனையில்
அழவும் முடியாமல், கண்ணீரும் சிந்தாமல்
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து இருந்தாள்
பேசமுடியா ஊமையைப்போல் வாயடைத்து…
'இறைவா இன்னும் உனக்கு அவன் செய்த
கொடுமை கண்களுக்கு தெரியலையா … ஏன் அவனை விட்டுவைத்தாய்…?
நீ இப்போது தண்டித்தாலும் என் துயர்
ஆறாது எனக்கு என்ன உன் தீர்ப்பு
சொல். சொல் , ' என்று பேசா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-May-19, 9:17 am)
Tanglish : aval
பார்வை : 80

மேலே