வாழ வேண்டுமா
கண்ணிலே நீர் எதற்கு?
காலமெல்லாம் அழுவதற்கு.
மனதினில் நினைவு எதற்கு?
என்றைக்கும் நினைப்பதற்கு.
உடலிலே தெம்பு எதற்கு?
வாழ்க்கையிலே போராடுவதற்கு .
அழுவதும் நினைப்பதும்
போராடுவதும் வாழ்வு என்றால்
வாழ வேண்டுமா என்ற எண்ணம்
மேலோங்க மேலோட்டமாக
முறுவல் அரும்பி மறைகிறது