வியர்வைத் துளி
வியர்வைத் துளி
கைய்க்கு வந்த சில்லரை
கல்லரைக்கு போகும் முன்
துரும்பாய் இழைக்க ….
கடைக்காரன் எல்லாம் கட்சி கட்டி
குடமுழக்கு செய்திட்டார்கள்
கம்பூட்டருக்கு கவர்னர் பட்டம் கொடுத்து !
மிச்சத்தை மாதாமாதம்
வளிச்சிப்போட தவறிய வங்கி
குரல் கொடுக்க தயங்கி
வந்ததை போனதை மாதம் ஒரு முறை
ஒப்பிலக்கன வரவு நகலை
தலையில்லா காகித உறையில் தூக்கலிட்டு
தபால்காரனுக்கு வரன் தேட
தெருத்தெருவாய் வாய் கிழிய
வாயார முகஸ்துதி பாடிட
வெளிவந்த புண்ணியவதி
போட்டு உடைத்தாள்
புருஸன் லட்சணத்தை
வாசல் படி வருத்தப்பட….
விலைவாசி வாசித்த பட்டியல்
வியர்வைத் துளிகளுக்கு
வருத்தம் தெரிவிக்க
வயது வரம்பு விடை கொடுத்தது
வியந்த பணிமனை விருந்து !
அடுத்த வேளை அளந்து உண்ண
கால அட்டவணை கையேந்த !
கலங்கிய கண்
காணுது சோகம்
சந்ததி சுற்றம் சுகமாய் வாழ….
சடுதி ஓய்வு பிறகு ஓட்டம்
ஊதிய காற்று உயர்வாய் ஏற்றம்
விட்டது துன்பம்…..
அகன்றது அசதி
மீண்டது வசதி !
கல் அரை தள்ளி போட்டது
புது வரவை !