புத்தகமே மணிமகுடம்

புத்தகமே
அனுபவ படிக்கட்டு
நம்மை ஏற்றிவிடும்
ஏணி
எழுத்தாளன்
தன் கருத்தை பிசைந்து
புத்தகங்களை
பிரசவிக்கிறான்
எழுத்துகளுக்கு
வண்ணம் கொடுத்து
எண்ணமேற்றி
வாழ்க்கைக்கு
உகந்ததாக்குகிறான்
உண்ணாமல்
உறங்காமல்
தூக்கத்தை தொலைத்து
தூரிகை கொண்டு
புத்தகங்களை
மணிமகுடமாக
முடிசூட்டுகிறான்
ஒரு புத்தகத்தை
வாசித்து நேசித்து
பாருங்கள்
அதன் அர்த்தமும்
அற்புதமும் தெரியும்
கருத்தை
சிந்தையில் ஏற்றி
உங்களை மனதோடு
உறவாட வைப்பது
புத்தகமே
வாழ்க்கை எனும்
கடலைகடக்க
கருத்தின் தோணியாக
இருப்பது
புத்தகமே