மரணம் நெருங்கும் நேரம்

மரணம் நெருங்கும் நேரம்
நெருங்கிய இதயத்தை தேடும்
கண்கள் ஏங்கியே சாகும்
வாழ்ந்த நாட்களை அசை போடும்

விட்டு கொடுக்கும் மனமின்றி
தட்டி பறிக்கும் குணமின்றி
பழி வாங்கிட துடிக்கும் சினமின்றி
பணத்தால் வந்திடும் பாசமின்றி

உண்மையாய் விரும்பும் ஓர் இதயம்
என்னில் உண்டு உன் உருவம்
முதல் பார்வையில் விழுந்த அந்த நொடி
அலுகாத காதல் சொல்லும் உந்தன் விழி

கடைசி நிமிடம் காதலடி
இமைகள் மூடாது என்விழி
உன்முகம் காணும்வரை
காதலோடு காத்திருப்பேன்

எழுதியவர் : ருத்ரன் (23-May-25, 3:16 am)
பார்வை : 19

மேலே