நானே எடைக்கல்
நானே எடைக்கல்..!
16 / 05 / 2025
யாரும் என்னை வெல்ல முடியாது
யாரும் எனக்கு கெடுதல் செய்ய முடியாது
யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது
யாரும் என்னை சிறைப்படுத்தவும் முடியாது
என் வெற்றியும் என்னால்தான்
என் தோல்வியும் என்னால்தான்
என் தொல்லையும் என்னால்தான்
என் பாவமும் என்னால்தான்
எல்லாம் என்னால்தான்.
நான் என்கின்ற கர்வம்தான்
ஏற்றமும் இறக்கமும் என்னால்தான்
வாழ்வெனும் தராசில்
நானே பண்டம்
நானே எடைக்கல்