மெல்லிடையாள் கல்லில் வடித்த சிலைபோல வந்துநின்றாய்

முல்லைமலர்த் தேன்சிந்தி மெல்ல இதழ்விரிக்க
நெல்லைத் தமிழ்க்கவிதை நல்கிடநான் காத்திருக்க
கல்லில் வடித்த சிலைபோல வந்துநின்றாய்
சொல்லோடை துள்ளுதுநெஞ் சில்
-----இன்னிசை வெண்பா
முல்லைமலர்த் தேன்சிந்தி மெல்ல இதழ்விரிக்க
சொல்லில் வடிக்கநான் காத்திருக்க -- மெல்லிடையாள்
கல்லில் வடித்த சிலைபோல வந்துநின்றாய்
சொல்லோடை துள்ளுதுநெஞ் சில்
---நேரிசை வெண்பா