உன்னை பாடவே

உன்னை பாடவே
இந்த ஜென்மம் எடுத்து
இந்த ஜென்மம் போகவே
உன்னை பாடி
உன் பொன் அடி தேடி
இந்த ஜென்மம் திரியுது
இத்தனை நாள்
தன்னை தானே அளிக்க
அண்டத்தில் என்னை ஒழிக்க
செய்த செயல் எல்லாம்
மறைத்து
புரியும் வரை எனக்கு உரைத்து
என்னுள்ளே உறைந்து உள்ள
உன்னை வெளிப்படுத்த
வெப்பம் தந்த ஜோதியே
அண்ணாமலையனே
கர்ம வினை என்னும்
சூழல் கரைந்திட
கபாலீஸ்வரா
கருணை நாயகனே
கண்கண்ட தெய்வமே
காத்தருளு ஈஷா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

எழுதியவர் : காவேரி நாதன் (8-Dec-25, 12:33 pm)
சேர்த்தது : KAVERINATHAN
Tanglish : unnai paadave
பார்வை : 8

மேலே