சொல்லதான் நினைக்கிறேன்
மூன்றெழுத்து கவிதை ஒன்று சொல்லச் சொன்னால்..
என்றும் சொல்வேன் என் மகள் என்று...
எந்தப் பிறவியில் இறைவனிடம் வரம் கேட்டேனோ?!
மனமிரங்கி மகளாய் உனை அனுப்பி வைத்தானோ?!
பூக்களை முன்னோராய் கொண்டவளோ?
அதனால் பூவைப் போல் மென்மை உடையவளோ?
ஓர வஞ்சனை செய்து விட்டான் இறைவன்..
அனைத்து பொறுமையும் உனக்கே கொடுத்து விட்டான்..
நீ எங்கிருந்தாலும் வாழ வேண்டும் நலமாக..
என் வாழ்த்துக்கள் வாழ வைக்கும் உனை வளமாக..
தென்றலாய் வாழ்ந்து பெருமை சேர்க்கும் மகளே!
என்றும் நீ என் வாழ்வின் குட்டி தேவதையே!

