நிறத்தை தேடும் நிலா
எமது உள்ளத் தேடலில்
தேடித் தேடியே
தேய்ந்து போகிறேன்
தேய்பிறையாய்........
என் தேடல் என்ன?
தொலைந்தது பொருளா?
புதையலா
?தெரியாத நெஞ்சங்களுக்கு
விடையறியா ?உள்ளங்களுக்கு
விளக்கம் தருகிறேன்.
விரும்பி ஏற்போர் சிலர் ...
விடை பெறுவோர் பலர்.....
பள்ளி பருவத்தில்
கார்கால மேகமாய் கரிய நிறம்
பள்ளிச் சீருடை யோ
பால் நிற வெள்ளை
பார்ப்பதற்கு
கருப்பு வெள்ளை தொலைக்காட்சியாய்
தொலைவில் சென்றாலும்
துரத்தும் கண்கள்
தொலைவில் ஒலித்த பாடல்
எனது செவியில் மென்மையாய்
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
பாடலில் மனதைப் பறி கொடுத்தோர்....
மண மேடையில்
என் நிறத்தை
ஏற்பாரோ?
மணப்பெண்ணாக........
இளையகவி

