நிம்மதி உண்டே நினை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(அ மோனை, ய் இடையின ஆசு, ய கரம் எதுகை)
அய்யப்பன் பாட்டை அனுதினமும் கேட்டுவர
மெய்யாக வேகிடைக்கும் மேனியிலே - பொய்யில்லை
அம்பாள்,நல் மீனாட்சி அள்ளித் தருகின்ற
நிம்மதி உண்டே நினை!
- வ.க.கன்னியப்பன்

