வார்த்தைகள்
உள்ளதை உள்ளபடி உரைக்கப்படும்
உண்மையான வார்த்தைகள்
வலியை கொடுத்தாலும்..
மனிதனை செதுக்கும் உளியாகவே மாறும்!
சில நேரங்களில்..
இலவசமான வார்த்தைகளை பேசியதற்காக..
அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்
வாழ்க்கையில்..
விடுதலை பெற்ற சில வார்த்தைகள்
சிறை செய்துவிடும் உறவுகளை..

