KAVERINATHAN - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  KAVERINATHAN
இடம்
பிறந்த தேதி :  29-Aug-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Aug-2020
பார்த்தவர்கள்:  198
புள்ளி:  55

என்னைப் பற்றி...

கற்பனையின் உணர்வுகளை உருவப்படுத்த தமிழ் எழுத்துக்களை கோர்க்கும் சிறு ஊழியன்

என் படைப்புகள்
KAVERINATHAN செய்திகள்
KAVERINATHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2025 12:34 pm

உறுதுணையான உண்மையே
என்றும் நன்மையே
பஞ்சராட்சரம் கூற
வரமாய் வந்த உள்ளுணர்வே
உன்னை துதித்து
உன் புகழ் பாடி
பரமசிவனே
அர்த்தநாதீஸ்வரனே
அன்பும் உறுதுணையும் நீயே
உன்னையே எண்ணியே
உன் பொற் பாதம் நோக்கி நான் வர
வரம் தந்த வள்ளலே
ஏக்கம் கலைந்த
ஏகாம்பரேஸ்வரா
கவலை அகற்றும்
கபாலீஸ்வரா
அர்த்தம் அறியவைத்த
அர்த்தநாதீஸ்வர
தீமை அகற்றிய
தீர்த்தபாலீஸ்வரா
மருத்துவனே
மருந்தீஸ்வரா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

மேலும்

KAVERINATHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2025 12:33 pm

எல்லாம் உன் செயலே
எல்லாம் உன் அருளே
கஷ்டம் ஆகா நான் நினைப்பதும்
கஷ்டத்திலே உன்னை நினைப்பதும்
கஷ்டம் மறந்து உன்னை மட்டும் நினைந்து
உன் புகழ் பாடி
உள்ளம் மகிழ
அருளிடு இறைவா
உன் பொற் பாதம் பணிந்திட
ஆசி வழங்கிடு ஆனந்தனே
அர்த்தநாதீஸ்வரனே
நடராஜா
உன்னிப்பாய் உன்னையே
உற்று நோக்கி
உறுதுணையாய்
என்றும் துணையாய்
உன் துதி பாடிட
அருளிடு இறைவா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

மேலும்

KAVERINATHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2025 12:33 pm

உன்னை பாடவே
இந்த ஜென்மம் எடுத்து
இந்த ஜென்மம் போகவே
உன்னை பாடி
உன் பொன் அடி தேடி
இந்த ஜென்மம் திரியுது
இத்தனை நாள்
தன்னை தானே அளிக்க
அண்டத்தில் என்னை ஒழிக்க
செய்த செயல் எல்லாம்
மறைத்து
புரியும் வரை எனக்கு உரைத்து
என்னுள்ளே உறைந்து உள்ள
உன்னை வெளிப்படுத்த
வெப்பம் தந்த ஜோதியே
அண்ணாமலையனே
கர்ம வினை என்னும்
சூழல் கரைந்திட
கபாலீஸ்வரா
கருணை நாயகனே
கண்கண்ட தெய்வமே
காத்தருளு ஈஷா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

மேலும்

KAVERINATHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2025 12:31 pm

எல்லாம் உன்னாலே
என தெரிவதற்கு முன்னாலே
உன் முன் என்னை வரச்செய்து
உன்னை என்னை காண செய்து
உன் அருள் காட்டினாய்
அத்தனை கண்டும்
அர்த்தமரியாது
அன்பு புரியாமல்
ஆடிய எனக்கு
பக்குவம் தர
பாடம் புரியவைக்க
தூர தேசம் அனுப்பினாய்
தொலைவில் வந்த பிறகு
உன்னையே நினைத்து
பிரிவை தாங்காமல்
என்னை நானே சுத்தம் செய்ய
எனக்குள்ளே நீயும் வந்தது உணர்ந்தேன்
உள்ளே இருந்த உன்னை
அறியாமல்
எண்ணற்ற செயல்களில்
என்னையும் அறியாமல்
இழந்த நேரம் எல்லாம்
உன்னை நினைத்திருந்தால்
எந்நேரமும் நீ எனக்குள் எப்படி இவ்வளவு
பொறுமையாக இருந்தாய் என் இறைவா
கூட்டி செல்
போதும் இந்த திருவிளையாட்டு
உன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே