சில்வண்டு ---காதல் தோல்வி

நீல வானம் வந்துலாவும் பால்நிலா
எங்கும் நிசப்தம்
'நிசப்த பள்ளத்தாக்கில்'
திடீரென இந்த நிசப்தம் கிழிய
சில் வண்டுகளின் 'பேஸ் கிடார்' இசை..
இப்போது உச்சஸ்தாயியில்....
நடுநிசி வரை இது வியாபிக்க
எப்படி வந்ததோ அப்படியே இந்த சபதம்
சுவடு தெரியாது நின்றது....சட்டென ..

காலை உதயம்....சூரியோதயம்
நான் 'நிசாப்பிட பள்ளத்தாக்கில்' நேற்று இரவு
நடந்த சில்வண்டு கச்சேரி நின்றதன் காரணம் தேடி...
பட்டுப்போன மாற பொந்துகளில்.... எட்டிப்பார்த்தேன்
இறந்து கிடந்தன சில்வண்டுகள்.

ஆம் இரவு முழுவதும் தன பேடைக்காக
கூவி அழைத்து குரல் வெடித்து ....
பாவம் தம்மையே மாய்துகொண்ட வண்டுகள்
இன்னும் இரக்கம் இல்லாது
எங்கோ இருக்கும் பெண் சில்வண்டுகள்...

இப்படியும் ஓர் காதல் தோல்வியா !!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Sep-25, 10:13 am)
பார்வை : 21

மேலே